தேவனால் அருளப்பட்ட சுகமளித்தலின் வழி GOD'S PROVIDED WAY OF HEALING Chicago Illinois U.S.A. 54-07-19 1. மாலை வணக்கம், நண்பர்களே. நீங்கள் உட்காரலாம். நம்முடைய கர்த்தருடைய நாமத்தில் மீண்டும் சேவை செய்யும்படியாக, இங்கே இந்தப் பிற்பகலில் இருப்பது என்பது உண்மையாகவே ஒரு சிலாக்கியமாக இருக்கிறது. சற்று முன்பு தான் ஆராதனையைத் துவங்கினோம், என்னுடைய சகோதரர்களில் சிலர் (ஒலிநாடா) பதிவு செய்பவர்களோடு (recorders) இங்கேயுள்ள பதிவு செய்யும் இடத்தில் (recording pit) இருப்பதைக் காண்கிறேன், எனது மகன் பில்லிபால், ஒரு நண்பராகிய சகோதரன் உட் அவர்களை கட்டிடத்தின் முன்பாகத்தில் சந்திக்கலாமா என்று கேட்டிருக்கிறான், ஆராதனைகளுக்கான புத்தகங்கள் மற்றும் புகைப்படங்கள் சம்பந்தமாக, தன்னால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு சீக்கிரமாக, அவரை வெளியே முன்புறத்தில் சந்திக்கலாமா என்று கேட்டுக்கொண்டான். மிகவும் அருமையாக அறிமுகப்படுத்தப்பட்ட, இந்த அறிமுகத்தைக் கொண்டிருப்பது என்பது, நான்... என்ன விதமான ஒரு நபராக... அதற்கு ஏற்ப ஒரு அருமையான நல்ல ஜீவியத்தை நான் ஜீவிக்க வேண்டியிருந்திருக்கும், இல்லையா? ஆனால் அது சகோதரன் மாட்சன் அவர்கள் என்னை நேசிக்கிற காரணத்தினால் தான். அவர் என்னுடைய மிகச்சிறந்த நண்பராயிருக்கிறார். எனவே, நாங்கள் இங்கேயிருக்கும் இந்த சிலாக்கியத்திற்காக மிகவும் சந்தோஷப்படுகிறோம், மேலும் நான் சிகாகோவில் காரியங்களைத் துவங்குவது போன்று தான் தோன்றுகிறது. என்னுடைய ஊழியத்தின் வருடங்கள் எல்லாவற்றிலும், என்னுடைய ஊழியம் எல்லாவற்றிலும், நான் ஒரு பிற்பகல் ஆராதனையை எப்பொழுதாவது கொண்டிருப்பது இதுவே முதல்முறையாக இருக்கிறது. என்னால் நினைவுகூரக்கூடிய என்னுடைய ஊழிய காலம் எல்லாவற்றிலும், நான் எப்பொழுதாவது பிற்பகல் நடத்தும் ஒரு - ஒரு போதனை கூட்டத்தைக் (instruction meeting) கொண்டிருப்பது இதுதான் முதல் தடவையாகும். மேலும் இப்பொழுது, ஏறக்குறைய ஒன்பது வருடங்களாக, நான் ஆராதனைகளில் இருந்து வருகிறேன் என்று நினைக்கிறேன். ஆகையால், சகோதரன் ஜோசப் அவர்களே, நான் சிகாகோவில் மறுபடியுமாக புதிதாகத் துவங்குகிறேன். இதேவிதமாக காரியங்களைத் தொடங்க அல்லது ஆரம்பிக்க இதை விட மேலான எந்த நல்ல இடத்தையும் நான் அறியேன். [சகோதரன் ஜோசப் அவர்கள் சகோதரன் பிரன்ஹாமைப் பற்றி சபையாரிடம் பேசுகிறார் - ஆசிரியர்.] உமக்கு நன்றி. சகோதரன் ஜோசப் அவர்களே, உமக்கு நன்றி. அன்பு கிறிஸ்தவ நண்பர்களே, உங்களுக்கு நன்றி. 2. மூடியின் நாட்களில் இருந்தது போல, சிகாகோவில், முழு பட்டணமும் தேவனுக்காக அசைக்கப்படும்படியான ஒரு எழுப்புதலை தேவன் ஏதோவொரு நாளில் நமக்குத் தருவார் என்று நான் அடிக்கடி எண்ணுவண்டு. அந்த நாள் முதற்கொண்டு, அப்படிப்பட்ட ஒரு எழுப்புதல் இருந்ததில்லை, அது சமீபத்தில் உள்ளது என்று நான்-நான் விசுவாசிக்கிறேன். கிறிஸ்தவ நண்பர்களே, என்னுடைய ஊழியத்தில் இருந்துவரும் ஒரே ஒரு காரியம் என்னவென்றால், இந்த ஒலிப்பதிவு பெட்டிகள் (recorders) இந்தக் காரியங்களை பதிவுசெய்து கொண்டிருக்கின்றன (picking up) என்றும், அவர்கள் அவைகளை எல்லாவிடங்களிலுமுள்ள செய்தித்தாள்களில் பரப்புவார்கள் என்றும் எனக்குத் தெரியும். எனவே நான் கூறுகிற வார்த்தைகளை கவனித்து, அவைகளை அளந்து பேச வேண்டியிருக்கிறது, ஏனென்றால் கட்டுரை எப்பொழுதாவது வெளியிடப்படுகிறது, உங்கள் சத்தம் ஒருமுறை ஒரு ஒலிப்பதிவு பெட்டியில் (recorder) பதிவுசெய்யப்பட்டு விட்டால், அது போதுமானது. புரிகிறதா? அதுதான் அது. அவ்வண்ணமாக அவர்கள் ஜனங்களுக்காக பதிவுசெய்ய வேண்டுமென்றாலும் அதை பதிவுசெய்து கொடுக்கிறார்கள், அநேக நேரங்களில், (ஜெப) வரிசையில் அவ்வாறு செய்கிறார்கள். நீங்கள் கவனிப்பீர்களானால், சில ஜனங்கள் அதனூடாக வந்து, "நல்லது, இப்பொழுது கர்த்தர் இன்னின்ன காரியங்களைச் சொன்னார்" என்று கூறுகிறார்கள். நல்லது இப்பொழுது, நீங்கள் அந்த ஜனங்களுடைய வார்த்தையை மாத்திரம் எடுத்துக்கொள்வீர்களானால், நல்லது, நமக்கு இருப்பதெல்லாம் அவ்வளவு தான். ஆனால் ஒலிப்பதிவு பெட்டி (recorder) அதைத் தீர்த்து வைக்கிறது. பாருங்கள்? சொல்லும்போது, ஏன்,... செய்யும்படி அவர் உங்களிடம் கூறுவதைக் கவனியுங்கள், உங்களுடைய இலக்கையும் கவனியுங்கள், அந்த நேரத்தில் அவர் உங்களிடம் என்ன கூறினார் என்பதையும், நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதையும் பாருங்கள், பிறகு... அது சம்பவிக்கப்போகும் அந்த நேரத்தில், அவர் உங்களுக்கு என்ன கூறுகிறார் என்று கவனியுங்கள். அப்போது நீங்கள் கண்டுபிடிப்பது என்னவென்றால், நீங்கள் எப்பொழுதும் ஒருநேரத்திலும் ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்கவே மாட்டீர்கள், ஆனால் தேவன் ஒவ்வொரு முறையும் தாம் செய்வார் என்று என்ன கூறுகிறாரோ அதையே அப்படியே சரியாகச் செய்வார் என்பதைத் தான் நீங்கள் கண்டுகொள்வீர்கள். புரிகிறதா? அவர் அதைச் செய்வார். 3. எனக்கு ஏப்ரல் மாதத்தில் 45 வயது ஆகிறது... முதற்கொண்டு நான் தரிசங்களைக் கண்டுவருகிறேன். எனக்கு நினைவில் இருக்கும் முதலாவது காரியங்களில் ஒன்று என்னவென்றால், அது விநோதமாகத் தோன்றுகிறது, ஆனால் நான் இன்னும் ஊர்ந்து செல்வது எனக்கு நினைவிருக்கிறது. என்னுடைய நாட்களில், குழந்தையானது ஊர்ந்து சென்று கொண்டிருக்கும்போது, அவைகள் நீண்ட ஆடைகளைக் கொண்டிருக்கும். என்னுடைய ஆடையில் என் அம்மா ஒரு சிறிய நாடா (ரிப்பன்) வேலைப்பாட்டை வைத்திருந்தது நினைவிருக்கிறது. நான் ஒரு பழைய குடிசையின் தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தேன், அது நான் பிறந்த கென்டக்கியின் மலைப்புறங்களில் இருந்தது. நான் ஏதோவொரு மனிதருடைய காலில் இருந்த வெண்பனியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னால் நினைவுகூரக்கூடிய முதல் காரியம் அதுவாகத்தான் இருக்கிறது. எனக்கு நினைவிலிருக்கும் அடுத்த காரியம் என்னவென்றால், தேவன் ஒரு தரிசனத்தில் என்னிடம் பேசினது தான், என்னுடைய வாழ்க்கையின் ஒரு பெரும் பாகத்தை நியூஆல்பனி என்று அழைக்கப்படும் ஒரு பட்டணத்திற்கு அருகில் செலவழிப்பேன் என்று அவர் என்னிடம் கூறினார். கடந்த நாற்பது வருடங்களாக, நான் இந்தியானாவிலுள்ள நியூஆல்பனிக்கு ஒரு சில மைல் தூரத்திற்குள் தான் வசித்து வந்திருக்கிறேன், அது அந்த இடத்திலிருந்து 200 அல்லது 300 மைல்கள் தூரத்தில் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரையில், எங்களுடைய ஜனங்களில் யாருமே கென்டக்கி மாகாணத்துக்கு வெளியே இவ்வளவு தொலைவில் இருந்ததில்லை (வசித்ததில்லை). ஆனால் எப்போதுமே, ஒவ்வொரு முறையும்... பாருங்கள்? வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இன்றியே இருக்கின்றன (கொடுக்கப்படுகின்றன). இவைகள் முதலாவது தேவனால் கொடுக்கப்படுகின்றன. அந்த அலுவல்கள் தேவனால் தான் சபையில் நியமிக்கப்பட்டுள்ளன. என்னுடைய கருத்தின்படி, இந்நாளில் அங்குதான் அநேகர் தவறு செய்திருக்கிறார்கள். நாம், "இப்பொழுது, நான் சென்று, தேவன் என்னை இதையும், அதையும் செய்ய வைக்கும்படியாக நான் அவரைத் தேடுவேன்" என்று கூறும்போது. உங்களால் அதைச் செய்ய முடியாது. புரிகிறதா? கிருபையினாலே நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்களோ, அவ்வாறு தான் நீங்கள் இருக்கிறீர்கள், நீங்களாகவே உங்களுக்குள் செய்ய முடிவது எதுவுமே கிடையாது. தேவன் தான் கொடுக்கிறார். தேவன் சபையில் அப்போஸ்தலர்களையும், போதகர்களையும், தீர்க்கதரிசிகளையும் நியமித்திருக்கிறார். அது சரிதானா? ... பரிபூரணப்படுத்தம்படியாக தேவனே சபையில் நியமித்திருக்கிறார். எனவே பிஷப்போ, அல்லது மூப்பரோ, அல்லது வேறு யாரிடமும் இல்லை, ஆனால் தேவனிடம் தான் இருக்கிறது. அவர்கள்-அவர்கள்... அந்த அலுவல்கள் சபையில் பொருத்தப்பட்டிருக்கிறது. 4. இப்பொழுது, ஒன்பது ஆவிக்குரிய வரங்களைப் போன்ற அந்த வரத்தை நான் அறிவேன்; அவைகள் முழு சபையிலும் கிரியை செய்யும் வரங்களாக உள்ளன. உதாரணமாக, இன்றிரவு இந்த ஒருவர் தீர்க்கதரிசனம் உரைத்து, மீண்டும் ஒருபோதும் தீர்க்கதரிசனம் உரைக்காமல் இருக்கலாம். ஒருக்கால் அடுத்த இரவு தீர்க்கதரிசனத்தின் ஆவி வேறு யாரோ ஒருவர்மேல் இருக்கும். பவுல், "நீங்கள் எல்லாரும், ஒருவர் பின் ஒருவராக தீர்க்கதரிசனம் உரைக்கலாம்" என்று கூறினான். அது தீர்க்கதரிசன வரமாக இருக்கிறது, அது ஒரு தீர்க்கதரிசி அல்ல. புரிகிறதா? தீர்க்கதரிசன வரத்திற்கும், ஒரு தீர்க்கதரிசிக்கும் சற்று வித்தியாசம் இருக்கிறது. பவுல் கொரிந்தியருக்கு எழுதினதின்படியாக, தீர்க்கதரிசன வரமானது, சபை அதை ஏற்றுக்கொள்ளும் முன்பாக, மூன்று நல்ல ஆவிக்குரிய நிதானிப்பாளர்களால் நிதானிக்கப்பட வேண்டும். நிதானித்துப் பார்க்கிறவர்கள் இதை நிதானித்துப் பார்க்க வேண்டும, அந்நிய பாஷைகளை சபை ஏற்றுக்கொள்ளும் முன்பாகவும், அந்நிய பாஷைக்கான வியாக்கியானங்கள் நிதானிக்கப்பட வேண்டும், ஏனென்றால் அவர்கள்... அறியாமல் இருந்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது, ஏசாயா, எரேமியா, மோசே போன்ற ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும் ஒரு நபரை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அது சரியா அல்லது தவறா என்று நிதானிக்கும்படி, யாருமே அவர்கள் முன்பாக நிற்கவில்லை. அவர்கள் தீர்க்கதரிசிகளாகவே இவ்வுலகத்தில் பிறந்தார்கள். தேவனுடைய வார்த்தை அவர்களோடு இருந்தது. "பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாளில், தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாகத் திருவுளம்பற்றினார்." இந்தக் கடைசி நாளில் சபையின் தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்து தான், அது அவர் தான். இயேசு கிறிஸ்துவைக் குறித்த ஆவி அல்லது சாட்சியானது தீர்க்கதரிசனத்தின் ஆவியாக இருக்கிறது என்று வெளிப்படுத்தின விசேஷத்தில், வேதாகமம் கூறுகிறது. 5. ஆகையால், இந்தக் காரியங்களில், இந்த எல்லா மகத்தான காரியங்களும், சபையானது ஒன்றோடொன்றாக நியமிக்கப்பட்டிருப்பதைக் காணும்போது... நான் பெந்தெகோஸ்தே சபையை முதலாவது கண்டு, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதைக் கேட்டபோது, அது பிசாசு என்று ஒரு பாப்டிஸ்டாக இருந்த எனக்குப் போதிக்கப்பட்டிருந்தது. எனவே நான், "இப்பொழுது, இதோ பாருங்கள்..." என்று நினைத்தேன். நான்-நான், "நல்லது, ஒரு காரியம் என்னவென்றால்... சபை என்ன கூறுகிறது என்று எனக்குக் கவலையில்லை, "அவர்கள் புதிய பாஷைகளில் பேசுவார்கள்" என்று வேதாகமம் கூறியுள்ளது" என்று நினைத்தேன். இப்பொழுது, முதலாவது காரியம் என்னவென்றால், நான் ஒன்றில் சபை என்ன கூறுகிறது என்பதையோ, அல்லது வேதாகமம் என்ன கூறுகிறது என்பதையோ ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நான், "நான் என்ன செய்யப் போகிறேன்?" என்று கூறினேன். அவர், "ஒவ்வொரு மனுஷனுடைய வார்த்தையும் (அது பிஷப்பாக இருந்தாலும், தலைமை பேராயராக (archbishop) இருந்தாலும், அவர் யாராக இருந்தாலும்) அது பொய்யாகவும், என்னுடைய வார்த்தையோ சத்தியமாகவும் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார். அதுதான் கத்தோலிக்கத்திற்கும் புராட்டஸ்டன்டிசத்திற்கும் இடையேயுள்ள மிகப்பெரிய வித்தியாசமாக இருக்கிறது. பாருங்கள்? கத்தோலிக்கம், உங்களால் ஒரு கத்தோலிக்கனிடம் வேதாகமத்தைக்கொண்டு, விவாதிக்க முடியாது. ஏனென்றால், எல்லாவற்றிற்கும் பிறகு, சபையானது வேதாகமத்திற்கு முரணான ஏதோவொன்றைக் கூறுமானால், அது சபை தான். அவர்கள், "தேவன் தமது சபைக்குள் இருக்கிறார்" என்று கூறுகிறார்கள். புரோட்டஸ்டன்டோ, "தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார்" என்று கூறுகிறான். பாருங்கள்? இப்பொழுது, அங்கேதான் வித்தியாசம். எனவே உங்களால் விவாதிக்க முடியாது, ஏனென்றால் சபையானது ஒரு குறிப்பிட்ட காரியத்தைக் கூறுமானால்... வெள்ளிக்கிழமையில் மாமிசம் புசிக்கக்கூடாது என்பதை அவர்கள் எங்கே பெற்றுக்கொண்டார்கள் என்பதையும் இந்த மற்ற எல்லா காரியங்களையும் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்களால் முடியும்... ஏன், சபை அவ்வண்ணமாகக் கூறியுள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள். 6. ஒருசில நாட்களுக்கு முன்பு, ஒரு பாதிரியாரிடம் எனக்கு ஒரு பேட்டி உண்டாயிருந்தது; அந்தப் பாதிரியார் சொன்னார்... எனக்கு முன்பாக இருந்த சில ஜனங்கள் கத்தோலிக்கர்களாக இருக்க, நான் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நான், "வேதப்பூர்வமான சில கேள்விகளை நான்-நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்" என்று கூறினேன். அவர், "திரு. பிரன்ஹாம் அவர்களே, சற்று பொறுங்கள். பாரும், கத்தோலிக்கராகிய நாங்கள் தேவாலயத்திற்குச் சென்று, தொழுதுகொள்கிறோம். புரட்டஸ்டன்டுகளாகிய நீங்களோ வீட்டிலேயே தரித்திருந்து, வேதாகமத்தை வாசிக்கிறீர்கள், ஆனால் நாங்கள் தேவாலயத்திற்குச் சென்று ஆராதிக்கிறோம்" என்றார். நான், "ஆனால் எதை ஆராதிக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதுதான் அடுத்த காரியம். "எதை ஆராதிக்கிறீர்கள்?" இப்பொழுது, அவர், "பாரும், ...என்னவென்று நாங்கள் கவனிப்பது கிடையாது. வேதாகமம் சொல்லுவது எல்லாம் சரிதான், ஆனால் சபை அதற்கு முரணாகக் கூறுமானால், சபை தான் சரியாக உள்ளது, ஏனென்றால் பேதுரு போப்பாக இருந்தார், போப்புகள் பேதுருவை தொடர்ந்து தான் வருகிறார்கள்; சபை ஒருமித்து நியமிக்கும் எதுவாக இருந்தாலும், அதுதான் ஒழுங்காக இருக்கிறது" (என்று கூறினார்). அவ்வாறு தான் அது போகிறது. தேவன் இன்னும் அசைவாடிக் கொண்டிருக்கிறார்... "நல்லது," நான், "நிச்சயமாக, அதெல்லாம் சரிதான். ஒவ்வொரு மனிதனும்... அதுதான் இந்த அமெரிக்காவை நிர்மாணிக்கிறது; ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த நம்பிக்கையை (உடையவனாயிருக்கிறான்)" என்றார். ஆனால் தேவன் கூறியிருப்பது எதுவாக இருந்தாலும்,... என்று நான் விசுவாசிக்கிறேன். தேவனுடைய வார்த்தை மாறுவதில்லை. தேவனுடைய வார்த்தை மாறுவதே கிடையாது: "அதன் ஒவ்வொரு சிறு பாகமும் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது." பவுல், "இந்த வேத புத்தகத்தில் உங்களுக்கு ஏற்கனவே கற்பிக்கப்பட்டுள்ளவற்றைப் பார்க்கிலும், வேறு ஏதாகிலும் காரியத்தை, வானத்திலிருந்து ஒரு தூதனாவது வந்து, போதித்தால், அவன் உங்களுக்கு சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்" என்று கூறியுள்ளான் என்று நான் விசுவாசிக்கிறேன். கலாத்தியர் 1:8. எனவே தான் நான் வேதாகமத்திலுள்ள ஒரு அடிப்படை விசுவாசியாக இருக்கிறேன். வேதாகமம் என்ன கூறினாலும், நான் அதை விசுவாசிக்கிறேன். அது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன், வேதாகமத்தின் எந்த அதிகாரத்தின் மேலும், அல்லது, எந்த-எந்த வாக்கியத்தின் மேலும், காற்புள்ளியின் மேலும், அது என்னவாக இருந்தாலும் அதன்மேலும், நான் என்னுடைய ஆத்துமாவை பற்றிப்பிடித்துக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறேன், தேவனுடைய வார்த்தையானது நித்திய சத்தியமாக இருக்கிறது. அது தெய்வீக ஏவுதலோடு எழுதப்பட்டிருக்கிறது, நாம் அதனோடு தரித்திருக்கிறோம். 7. பழைய ஏற்பாட்டில், அவர்களால் ஒரு செய்தியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்த மூன்று வழிகள் இருந்தன. அது ஒரு தீர்க்கதரிசியின் மூலமாகவோ, ஒரு சொப்பனக்காரன் மூலமாகவோ, அல்லது நியாயப்பிரமாணம் மூலமாகவோ இருந்தது. மேலும் இப்பொழுது, ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்திருந்தால்... ஆரோனின்-ஆரோனின் மார்பின் மேல் ஊரிம் தும்மீம் இருந்தது. அப்போது அந்த ஊரிம் தும்மீமின்மேல் வெளிச்சம் பளிச்சிடுமானால் (flashed), அந்த தீர்க்கதரிசி சத்தியத்தையே கூறிக் கொண்டிருக்கிறான். ஆனால் அந்த ஊரிம் தும்மீமின் மேல், வெளிச்சம் பளிச்சிடவில்லை என்றால், அது தவறாக இருந்தது. ஒரு சொப்பனக்காரன் ஒரு சொப்பனம் கண்டு, அந்த சொப்பனத்தைக் கூறினால், அது அந்த ஊரிம் தும்மீமின்மேல் பளிச்சிடவில்லை என்றால், அது தவறாகத்தான் இருந்தது. ஒரு தீர்க்கத்தரிசி, தான் தீர்க்கதரிசனம் உரைத்து, அந்த வெளிச்சம் பளிச்சிடவில்லை என்றால், அவன் தவறாகத்தான் இருந்தான். அந்த ஆசாரியத்துவத்திலிருந்த ஊரிம் தும்மீம் எடுக்கப்பட்டு விட்டது, ஆனால் இன்றைய ஆசாரியத்துவத்தின் ஊரிம் தும்மீம் இதோ இருக்கிறது, ஒரு சொப்பனக்காரனோ, ஒரு தீர்க்கதரிசியோ, ஒரு பிரசங்கியோ, அல்லது எதுவும் இந்த வேதாகமத்திற்கு முரணாகப் போதிப்பான் என்றால், அது தவறாக இருக்கிறது. அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். ஆனால் அது, கர்த்தர் உரைக்கிறதாவது என்ற இந்த வார்த்தையின் மேல் உறுதியாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த வார்த்தையானது சரியான ஒழுங்கில் வைக்கப்பட்டிருந்து, அது ஊழியக்காரன் மூலமாக போதிக்கப்படுமானால், அந்த வார்த்தைக்கு பதில் அளித்து, அதை நிறைவேற்ற தேவன் தம்முடைய குமாரனுக்கு தவறாமல் கடமைப்பட்டிருக்கிறார். இப்பொழுது, நான் அந்தவிதமாகத்தான் வேதாகமத்தை விசுவாசிக்கிறேன். இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, என்னால் இதை ஒன்றாக சேர்க்க இயலாமல் இருக்கும் நேரங்கள் இருக்கலாம். ஒவ்வொரு வார்த்தையையும் சரியானவிதமாக ஒன்றோடொன்றாகப் பொருத்தக்கூடிய எந்த மனிதனும் இந்த உலகத்தில் இருக்கிறான் என்பதை நான் நம்ப மாட்டேன், ஆனால் செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் ஊக்குவிக்கையில் மாத்திரமே நம்மால் அதைச் செய்ய முடியும். அநேக நேரங்களில், அது நம்முடைய போதனைக்கு முரணாக இருக்கிறது. 8. சென்ற இரவு, என்னுடைய மனைவி வெளியே நின்று கொண்டிருக்க நேர்ந்தது. அவள், "அப்படியே சீக்கிரத்தில் - இரண்டு அல்லது மூன்று பேர் மேடையை கடந்து சென்றார்கள், ஒருகூட்ட ஜனங்கள் எழுந்து வெளியே வந்தார்கள். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்த்து, "அதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்? ஆ, பயனற்றது, அங்கே அதில் எதுவுமேயில்லை" என்று கூறினார். மேலும் ஒருசில நிமிடங்களில், வேறொருவர் வெளியே நடந்து வந்து, "நல்லது, அது மிகவும் நல்லதொரு கண்காட்சியாக இருந்தது, இல்லையா? உள்ளே போக பணம் செலுத்த வேண்டியதில்லை" என்று கூறினார்" என்றாள். இந்த உலகத்தின் வெற்று ஆசாரமுறையிலுள்ள ஜனங்களின் கருத்து அதுவாகத்தான் இருக்கிறது. பாருங்கள்? அது அவர்களுடைய கருத்து. அது எப்போதுமே அவர்களுடைய கருத்தாக இருந்து வருகிறது. (அந்தக்) கருத்து அங்கே இருந்தது... அவர்களுடைய பிதாக்கள் அதே கருத்தைக் கொண்டிருந்து, இன்று நரகத்தில் இருக்கிறார்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், அவர்கள் கடந்த இரவில் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தது சத்தியமாக இருந்திருக்குமானால் என்னவாகும்? அப்படியானால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரை தேவதூஷணம் செய்திருக்கிறார்கள், அது இம்மையிலும் மறுமையிலும் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை. அது சரிதானா? அது சரியே. உங்களுக்கு நிச்சயம் இல்லை என்றால், அமைதியாக இருப்பதுதான் மிகச் சிறந்தது. ஆகையால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 9. இப்பொழுது, இன்றிரவு நடக்கும் சுகமளிக்கும் ஆராதனைகளுக்கான போதனைகளைப் பெற்றுக் கொள்ளும் ஒரே நோக்கத்திற்காகவே நாம் இந்தப் பிற்பகலில் இங்கே ஒன்றுகூடி வந்திருக்கையில். தேவனுக்குச் சித்தமானால், வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்து, என்னுடைய ஆராதனைகளை வித்தியாசமாக துவங்க விரும்புகிறேன். நான் சற்று நேரத்திற்கு முன்பு, மேலாளர்களில் ஒருவராகிய நமது அன்பு சகோதரன் மூர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன், தேவன் என்னுடைய இருதயத்தில் எதை வைக்கிறார் என்பதை அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்: சிகாகோ, அல்லது ஏதோவொரு இடத்தைப் போன்ற இடத்திற்கு வந்து, அப்படியே ஓடிக் கொண்டிராமல், ஒருசில இரவுகளாக வந்து... பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று அவரிடம் கூறிக் கொண்டிருந்தேன். நீங்கள்... அது என்னை அப்படிப்பட்ட ஒருவிதத்தில் பலவீனமாக்கி விடுகிறது, அவர்கள் என்னை வெளியே அழைத்துப்போக வேண்டியிருக்கிறது. ஆனால் அங்கே வந்து, அங்கு ஜெப வரிசையை மேலே அழைத்துவந்து, ஒரு பாவியோ அல்லது ஏதோவொன்றோ மனந்திரும்பாமலேயே மேடையைக் கடந்து போனால், அது அவனுடைய கவனத்தைக் கவரும்படியான விதத்தில், பரிசுத்த ஆவியானவர் தாமே அதை கிரியை செய்யும்படியாக, அந்த வரத்தைப் பற்றிப்பிடிக்கும் அளவுக்கு (உங்களுக்குப் புரிகிறதா?), அப்படியே ஒருவர் பின் ஒருவராக ஜனங்களுக்கு தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருப்பது. பாருங்கள்? ஆனால் இந்த தெய்வீக வரம் மற்றும் அவருடைய பிரசன்னத்தின் மூலமாக, இந்த வழியில் செய்யும்போது, ஒருசில தடவைகள் தான், அது ஏறக்குறைய முடிந்துவிடுகிறது. அது என்னை மிகவும் பலவீனமாக்கி விடுகிறது; என்னால் கட்டிடத்தை விட்டு வெளியே போவதே கடினமாக இருக்கிறது. சிலசமயங்களில், அதற்குக் கீழாக நான் முற்றிலுமாக உணர்வு நிலையை இழந்துவிடுகிறேன். ஒருசமயம் எட்டு மாதங்களாக வெளியே இருந்து, நலமடைந்தேன். எனவே அந்த நேரம் உங்களுக்கு, உங்களில் அநேகருக்கு நினைவிருக்கும். 10. ஆனால் திரும்பி வரும்போது, தேவனுக்குச் சித்தமானால், (இந்த ஒலிப்பதிவுகள் நடந்து கொண்டிருக்க, நான் இதைக் கூறுகையில்), நான் திரும்பி வந்த பிறகு, ஒரு வருடத்திற்கான கூட்டங்களுக்கு நான் திட்டமிட முயற்சிக்கப் போகிறேன், பிறகு சிகாகோ போன்ற ஒரு இடத்திற்கு வந்து, கிறிஸ்து, "இப்பொழுது, நீ வேறு ஏதோவொரு இடத்திற்குப் போக விரும்புகிறேன்" என்று கூறுவது மட்டுமாக, சரியாக அங்கே சிகாகோவிலேயே, அது எந்த இடமாக இருந்தாலும் அங்கேயே தங்கியிருக்கப் போகிறேன். அப்போது, அதிலே, ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு இரவிலும் இருக்காது... அப்படியே என்னுடைய - கொண்டுவந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பீட அழைப்புகளை விடுத்து, ஜனங்களை இரட்சிக்கப்படவும், பரிசுத்த ஆவியால் நிறையப்படவும் செய்து, அதன்பிறகு என்னுடைய (ஜெப) வரிசையைக் கொண்டிருந்து, அது முடிந்த பிறகு வியாதியஸ்தருக்காக ஜெபம் பண்ணுவது. ஜெப அட்டைகளை விநியோகித்து, எப்பொழுதும் இந்த இரவிலே எங்கே விட்டோமோ, அடுத்த இரவிலே, அவ்விதமாக அதே நபரிடமிருந்து தொடங்குவது, அப்போது உங்களுக்கு - உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும். இந்த விதத்தில், நம்மால் அதைச் செய்ய இயலாது, ஏனென்றால், நாம் இங்கே ஒருசில இரவுகள் மட்டுமே இருக்கிறோம், யார் உள்ளே வருகிறார்களோ, அப்படியே நாம் அவர்களைப் பிடித்தாக வேண்டும். அந்தவிதத்திலோ, எந்த நேரத்திலும், ஒரு நபர், அவர்கள் அங்கேயே இருந்து, தங்கள் ஜெப அட்டைகளை நீண்ட காலங்களுக்கு முன்னரே கண்டிருந்தாலும், அவர்கள் நான்கு அல்லது ஐந்து இரவுகள், அல்லது ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம், அல்லது அது என்னவாக இருந்தாலும், அவ்வளவு காலம், தொடர்ந்து சென்று, மறுபடியும் கூட்டத்திற்குத் திரும்பி வரலாம். பாருங்கள்? நம்மால் அந்தவிதமாக எல்லாரையும் பிடிக்க முடியும். நான் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வரும்போது, அதுதான் என்னுடைய தரிசனமாக இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு மகத்தான கூட்டத்தைக் கொண்டிருக்க, நமக்கு உதவிசெய்யும்படி, தேவன் அதில் இருக்கிறார் என்று நம்புகிறோம். 11. இப்பொழுது ஏறக்குறைய ஒன்பது வருடங்களாக இந்தவிதமாக செயல்பட்டு வருகிறேன் என்று நினைக்கிறேன், அது சத்தியம் என்று கர்த்தர் மீண்டும் மீண்டுமாக, மீண்டும் மீண்டுமாக, மீண்டும் மீண்டுமாக உறுதிப்படுத்தியிருக்கும் போது, நாம் அதை ஒரு இடத்திலிருந்து வேறொரு இடம், ஒரு இடத்திலிருந்து வேறு இடமாக பார்க்கிறோம். எனவே, இப்பொழுது இந்த நேரம் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும் நேரம் என்று நினைக்கிறேன். நான் அதிகமாக ஒரு பிரசங்கி அல்ல; நான் பேசப் போவதைக் குறித்து அதன்பேரில் ஆராய்ந்து படித்திருக்கவில்லை. நான் அப்படியே தெய்வீக ஊக்குவித்தலின் மூலமாகவே பிரசங்கம் பண்ணுகிறேன். நான் அதைக் கண்டுபிடித்து, அதை தொடர்பு கொண்டு, அதைப் பெற்று, அதைப் பகிர்ந்து கொள்வது மட்டுமாக, ஆய்ந்து படித்துக் கொண்டேயிருப்பேன். சிலசமயங்களில் அது மிகவும் கடினமாக இருக்கும், ஆனால் அந்தவிதமாகத்தான் நான் அதைப் பெற்றுக்கொள்கிறேன்; அது கடினமாக இருக்கிறது. இவ்வாறாக, நான் அதை அந்தவிதமாகவே கொண்டிருக்க விரும்புகிறேன், ஏனென்றால் அவை எல்லாவற்றிற்கும் பிறகு, நாம் யாராக இருக்கிறோம்? நாம் ஒருகூட்ட பகட்டான உயர்குலத்தை சேர்ந்தவர்களோ, வணங்கா கழுத்துடைய ஜனங்களோ அல்ல. நாம் மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட பெந்தெகோஸ்தே ஜனங்களாக இருக்கிறோம். நம்முடைய பிதாக்கள் இந்த ஊக்குவித்தலின் கீழ் பிறந்தார்கள். அவர்கள் படிப்பறிவில்லாத பிரசங்கிமார்களாகத்தான் இருந்தார்கள். நம்முடைய பிதாக்கள், அவர்கள் யார்? பேதுரு, யாக்கோபு, யோவான். அது சரிதானா? அவர்கள் அலங்கார வாசல் என்னப்பட்ட அந்த வாசலினூடாக மேலே ஏறிப்போன போது, தன்னுடைய தாயின் வயிற்றிலிருந்தது முதல் முடமானவனாக, அங்கே இருந்த ஒரு மனிதனைச் சுகமாக்கினார்கள். ஏன், அவர்கள் ஏழை ஜனங்களாக இருந்தார்கள், அவன், "வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை" என்றான். மேலும் அப்போது, அவர்கள் பேதைமை உள்ள ஜனங்களாகவும் படிப்பறியாத ஜனங்களாகவும் இருந்தார்கள், ஆனால் அவர்கள் இயேசுவோடு இருந்திருந்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே காரியம் அதுதான். எனவே அவ்வாறு தான் நாமும் இருக்கிறோம். அந்தவிதமான ஜனங்களாகத் தான் நாமிருக்கிறோம். இப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, நாம் இப்பொழுது இந்த போதனைகளுக்குள் போகும்போது... சகோதரன் ஜோசப் அவர்களே, எந்த நேரத்தில் இங்கிருந்து போக வேண்டுமென்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள், அப்பொழுது நான்... இந்தவிதமான ஆராதனைகளை நாம் வழக்கமாக எந்த நேரத்தில் முடிப்போம்? ஏறக்குறைய 4 மணிக்கா? சரி, அது அருமையானது. அதெல்லாம், அது அருமையாகவே இருக்கும். நான்... செய்ய மாட்டேன். அங்கே வெளியே மிகவும் பின்னால் உங்களால் நன்றாகக் கேட்க முடிகிறதா? அது அருமையானது. அது... உங்களுக்கு நன்றி. 12. இப்பொழுது, நாம் இந்த புஸ்தகத்தைத் திறப்பதற்கு முன்பு... எந்த மனிதனாலும் இந்தப் புஸ்தகத்தைத் திறக்க முடியாது. நான் பக்கங்களைப் புரட்டி (turn back), "நாம் இங்கிருந்து ஒரு அதிகாரத்தை வாசிப்போம்" என்று கூறலாம். ஆனால் இந்த புஸ்தகத்தைத் திறந்து தரக்கூடிய ஒரே ஒருவர் தேவன் மாத்திரமே. பின்புறத்தில் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட அந்த புஸ்தகம் பரலோகத்தில் இருந்ததை நினைவுகூருங்கள். உங்களுக்கு அது ஞாபகம் இருக்கிறதா? லூத்தருடைய நீதிமானாக்கப்படுதலின் வழியாகவும், வெஸ்லியின் பரிசுத்தமாக்கப்படுதலினூடாகவும், பெந்தெகோஸ்தே பரிசுத்த ஆவியினூடாகவும் நாம் வந்திருக்கிறோம் என்று நீங்கள் எப்பொழுதாகிலும் எண்ணிப் பார்த்ததுண்டா, நாம் இன்னுமாக அதனோடு கூட நன்கு குழப்பமுற்றா இருக்கிறோம்? அங்கே வேறு ஏதோவொன்று வெளிப்பட வேண்டியிருக்கிறது. அது இங்கே எழுதப்பட்டிருக்கவில்லை; அது அந்த முத்திரைகளுக்குள் இருக்கிறது. கர்த்தருக்குச் சித்தமானால், நான் திரும்பி வரும்போது, அந்தக் காரியங்களின் பேரில் போதிக்கப் போகிறேன். தானியேல் அந்த எழு சத்தங்களைக் கேட்டான் என்பதையும், அவைகள் சத்தமிட்டு முழங்கினபோது, அவன் எழுதத் தொடங்கினான்; அவரோ, "அதை எழுதாதே - அதை எழுத வேண்டாம்" என்று சொன்னதை நினைவுகூருங்கள். புரிகிறதா? "அது கடைசி நாட்களில் வெளிப்பட்டாக வேண்டும்." அது சரிதானா? 13. யோவானும் அதே காரியத்தையே கண்டான், அவன் அங்கேயிருந்த அதைக் கண்ட போது, இந்த புஸ்தகத்தின் பின்புறம், துவக்கம் முதல் வழிவழியாக, அது போதிக்கப்பட்ட பிறகு, அதன் பின்புறத்தில், அது ஏழு முத்திரைகளைக் கொண்டிருக்கிறது. தேவனுடைய பரம இரகசியம் நிறைவேறும் போது, இவை உடைக்கப்பட வேண்டியிருந்தது (to be loosened). ஏழு பரம இரகசியங்களும் சபைக்கு திறக்கப்படுவதற்கான அந்த நேரத்தில் தான் நாமிருக்கிறோம். ஓ, என்ன முழு நிறைவான போதகத்தை இந்த வேதாகமம் பண்ணுகிறது. ஆனால் அந்தப் புஸ்தகத்தை எடுக்கவோ, அதை அதில் பார்க்கவோ, அல்லது அந்த முத்திரைகளை உடைக்கவோ கூட யாராலும் - எந்த ஒருவராலும் கூடாமல் இருந்தது. அங்கே உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியானவர் இருந்தார், அவர் வந்து சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய கையிலிருந்து அந்தப் புஸ்தகத்தை வாங்கி, அந்தப் புஸ்தகத்தைத் திறந்து, அதின் முத்திரைகளை உடைத்தார். எனவே நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துகையில், இதைச் செய்யக்கூடிய அவரிடமே இப்பொழுது நாம் ஜெபிப்போம். 14. எங்கள் பிரியமான, அன்புள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் இன்று உம்முடைய நேச குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தாழ்மையோடு உம்மை அணுகிவருகிறோம். நாங்கள் அந்நாளில் அவருடைய சமுகத்தில் பரிசுத்தமாகவும் குற்றமற்றவர்களாகவும் இருக்கும்படி ஆரம்பத்தில் உலகத்தோற்றத்திற்கு முன்பே, எங்களை சேர்த்துக்கொள்ளும்படிக்கு, அவர் எப்பொழுதும் எங்கள்மேல் அக்கறையுள்ளவராக இருப்பதற்காக நாங்கள் உமக்கு நன்றிகூறுகிறோம். அப்படியானால் எங்களால் எங்கே தற்பெருமை பேசிக்கொண்டிருக்க முடியும்? நாங்கள் செய்திருப்பது எதுவுமில்லை, எங்களால் செய்யக்கூடியதும் எதுவுமே கிடையாது, ஆனால் கிருபையினாலே, விசுவாசத்தின் மூலமாக நாங்கள் இரட்சிக்கப்படுகிறோம். உலகத்தோற்றத்துக்கு முன்பே, அவர் கிறிஸ்து இயேசுவுக்குள் எங்களைத் தெரிந்து கொண்டார். மேலும் நாங்கள் அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு, குற்றமற்றவர்களாக, பிதாவிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று, நாங்கள் மீட்கப்படும் நாள் மட்டுமான ஒரு முத்திரையாக, இப்பொழுது, பரிசுத்த ஆவியையும் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். இப்பொழுது, அவர் தாமே, வலது கரத்திலிருந்து அந்தப் புஸ்தகத்தை வாங்கி, இந்த பிற்பகல் வேளையில் வந்து, அந்தப் புஸ்தகத்தை எடுத்து, நாங்கள் அதன்பேரில் பேசுகையில், எங்களுக்கு அதைத் திறந்து தருவாராக. பிதாவே, இந்த ஏழை வியாதிப்பட்ட, தேவையுள்ள ஜனங்களுக்கு நீர் போதனைகளை அருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அநேகர் ஜெபிக்கப்படும்படியாக, பல மைல்கள் தொலைவிலிருந்து வாகனங்களை ஓட்டி வந்திருக்கிறார்கள். பிதாவே, நீர் உமது ஊழியனுக்கு ஆவியையும், அறிவையும், அருள வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன், எனக்காக அல்ல, ஆனால் இன்று இந்த அரங்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான, வியாதிப்பட்டுள்ள, தேவையை உடையவர்களாக இருக்கும் இந்த ஜனங்களுக்காகத் தான். இவர்கள் எவ்வாறு பற்றிப்பிடித்திருப்பது என்றும், உம்முடைய வாக்குத்தத்தங்களை எவ்வாறு விசுவாசிப்பது என்றும், இங்கே நீர் எங்களுக்குக் கொடுத்திருக்கிற வேதாகமத்திலுள்ள வார்த்தையைக் (கொண்டு) சத்துருவின் திட்டத்தைத் தகர்க்கும்படியாக, சத்துருவை எவ்வாறு தோற்கடிப்பது என்றும் இவர்கள் பரிபூரணமாக அறிந்துகொள்ளும்படியாக, நீர் தாமே அவர்களுக்கு அத்தகைய போதனையைக் கொடுப்பீராக. உம்முடைய பிள்ளைகளுக்கு இதை விரிவாக விளக்கிக்கூறும்படிக்கு நீர் இன்று எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், இந்த ஆராதனைகளிலிருந்து நீரே மகிமையைப் பெற்றுக்கொள்ளும். நாங்கள் இதை அவருடைய அழகான நாமமாகிய, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென். 15. ஒரு சிறு வேதவாக்கியத்தை வாசிக்கையில், நான் சங்கீதத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். சங்கீதம் 103, 1 முதல் 3 முடிய. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி; இந்த புஸ்தகத்தை மூடுகையில், இந்த வேதவாக்கியம் இந்த நாளில் உங்கள் முன்னிலையில் நிறைவேறிற்து, கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக, ஏனென்றால் அவர் இன்று நம்முடைய அக்கிரமங்கள் யாவற்றையும் மன்னித்து, நம்முடைய நோய்களையெல்லாம் குணமாக்குகிறார். இன்று இந்த வார்த்தையானது வெளிப்படுத்திக்காட்டப்பட்டிருக்கிறது: தேவன் எப்படியாக ஒரு முன்ஏற்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது, நான் அதை, "தேவனால் அருளப்பட்ட சுகமளித்தலின் வழி" என்று இந்தவிதமாக அதைப் பேசுவேன். 16. அநேக ஜனங்கள் தவறான மனப்பான்மையில் தான் சுகமளித்தலைத் தேடுகிறார்கள், அதற்காக தவறான நோக்கத்தில் வருகிறார்கள். ஒரு கிறிஸ்தவனோ, அல்லது சுகத்திற்காக வருகிற எந்த நபர்களும் செய்ய வேண்டிய முதலாவது காரியம் என்னவென்றால், அவர்களுடைய இருதயமானது தூய்மையாக இருக்கிறதா என்றும், தேவனுக்கு முன்பாக சுத்தமாக இருக்கிறதா என்றும் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகு இந்த வியாதி இன்னும் தொடர்ந்து இருக்குமானால், நீங்கள் ஏதோவொரு இடத்திலிருந்து உதவியைக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது, நான் என்னுடைய ஊழியத்தில் ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்லியிராத ஒரு காரியத்தை கூறப் போகிறேன். ஆனால் அவ்வண்ணமே அது என்னுடைய மனதில் அப்படியே வந்து கொண்டிருக்கிறது, நான் அதைக் கூற விரும்புகிறேன். நான் அதைத் தவிர்த்து விட்டேன், ஆனால் நான் இந்தப் பிற்பகலில் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்தப் பிற்பகலில் மாத்திரமே, நம்மில் குறைந்த அளவு பேர் தான் இங்கேயிருக்கிறோம். நாம் அப்படியே, அது இருக்கையில், இப்பொழுது, நம்முடைய மேற்சட்டைகளை எடுத்துப்போட்டு விட்டு, ஒருவருக்கொருவர் எதையும் மறைக்காமல் நேர்மையாகவும் திறந்த இருதயத்தோடும் பேசும்படிக்கு இறங்கி வருவோம். இப்பொழுது, ஜனங்கள், ஓ, "... சுகமளிப்பவர், இந்த தெய்வீக சுகமளிப்பவர்" என்று கூறுவதைக் குறித்து அதிகமாக கலக்கமுற்று வந்திருக்கிறேன். வெளிப்படையாகக் கூறினால், அவர்கள் அவ்வாறு தான் இருக்கிறார்கள். வேதாகம பதத்தில், அவர்கள் சரியாக அவ்வாறு தான் இருக்கிறார்கள். அவர்கள் பிரசங்கிமார்களாக இருப்பது எப்படியோ, அவர்கள் அப்போஸ்தலர்களாக இருப்பது எப்படியோ, மேலும் மற்ற எதுவுமாக அவர்கள் இருப்பது எப்படியோ, அப்படியே தான் அவர்கள் தெய்வீக சுகமளிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அது ஊழியம் செய்யும்படி, ஒரு நபருக்கு கொடுக்கப்பட்ட ஒரு தெய்வீக வரமாக இருக்கிறது. 17. இப்பொழுது, நல்லது, பிரசங்கம் பண்ணுவதைப் போல, நாம் (இதை) பொருத்திக்காட்ட - கூற விரும்புகிறோம். நல்லது, ஜான் டோ அவர்களோ அல்லது யாராவது பிரசங்கம் பண்ணுகிறார் என்று வைத்துக்கொள்வோம்... ஜான் டோ அவர்கள் ஒரு பிரசங்கியாராக இருக்கும்படி முற்றிலுமாக தேவனால் அழைக்கப்பட்டிராவிட்டால், அவர் ஒருபோதும் ஒரு வெற்றிகரமான பிரசங்கியாக இருக்கவே மாட்டார். அவர் ஒரு பிரசங்கியாக இருக்க வேண்டுமென்று, அவருடைய தாயார் அவரிடம் கூறியிருக்கலாம், அவருடைய தகப்பனார் ஒரு வேதாகமக் கல்லூரிக்கு அவரை அனுப்பியிருக்கலாம், அவருக்கு பட்டங்களும் மற்றவைகளும் இருக்கலாம்; ஆனால் பரிசுத்த ஆவியானவர் அம்மனிதருடைய ஜீவியத்திற்குள் வந்து, அவருக்கு ஏதோவொன்றைக் கொடுக்கும் மட்டுமாக, அவரால் ஜனங்களை தேவனிடம் வழிநடத்த ஒருபோதும் முடியவே முடியாது... அவரால் தம்முடைய வார்த்தைகளைச் சரியாகப் பேச முடியாமல் இருக்கலாம்; அவருக்கு சரியான இலக்கணமும் இல்லாமல் இருக்கலாம்; அவரால் சரியான வேதசாஸ்திரத்தை உபயோகிக்கவும் முடியாமல் இருக்கலாம்; ஆனாலும் அவருடைய ஜீவியத்தில் தேவனுடைய வல்லமை இருக்குமானால், ஜனங்கள் அதை அறிந்து கொள்வார்கள். அது சரியே. தேவன் அவரோடு கூட இருப்பார். நல்லது, அதே காரியம் தான், ஜான் டோ ஒரு கல்வி கற்ற மனிதராக இருக்கலாம், வேதசாஸ்திரத்தையும் மற்ற எல்லாவற்றையும் உடன் கொண்டிருக்கலாம், ஆனால் அவரால் செய்தியை பண்ண முடியாது, கர்த்தரால் அழைக்கப்பட்ட அந்த ஏழை படிப்பறிவில்லாத மனிதனோ. இப்பொழுது, நமக்கு அது தெரியும். நீங்களும் கூட அதை ஒப்புக்கொள்ளலாம், ஏனென்றால் நம்முடைய மிக மகத்தான ஊழியக்காரர்கள் அம்மாதிரியான மனிதர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக, ட்வைட் மூடியின் மூலமாக, சிகாகோவில் நடந்த சென்ற எழுப்புதலில், ஒரு - மகத்தான எழுப்புதலைக் (கூறலாம்). அவர் அதிகமாக கல்வி அறிவற்ற ஒரு மனிதராகத்தான் இருந்தார். அவருடைய இலக்கணம் மிகவும் மோசமாக இருந்தது, அது மிக மோசமாக இருந்தது. அவர் ஒரு சிறிய, வயதான காலணி (செருப்புத்) தைப்பவரே அல்லாமல் வேறல்ல. ஓ, நீங்கள் அவருடைய புத்தகங்களை வாசித்திருக்கிறீர்கள், ஆனால் ஆமாம், அந்த புத்தகங்கள் வேறு யாரோ ஒருவரால் எழுதப்பட்டவை தான், அவருடைய பிரசங்கங்கள் முழுவதுமே திருத்தி மேலும் சிறப்பாக எழுதப்பட்டவை தான். ட்வைட் மோடி ஒரு எழுதப்படிக்கத் தெரியாத மனிதராகவே இருந்தார். 18. இயேசு கிறிஸ்துவுக்குப் புறம்பாக, எல்லா காலங்களிலும், மிகப்பெரிய பிரசங்கிகளில் ஒருவனாக இருந்த, பேதுரு, மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவன், அவனுக்கு முன்பாக, அவனுடைய சொந்த பெயர் எழுதப்பட்டிருந்தாலும், அதுவும் கூட அவனுக்குத் தெரியாமல் இருந்தான். யோவான், பேதைமையுள்ளவனாகவும், படிப்பறியாதவனாகவும், அதைப் போன்ற மற்றவைகளாகவும் இருந்தான், ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவோடு இருந்திருந்தார்கள், வல்லமையுடைய ஒரு செய்தி அவர்களிடம் இருந்தது. பேதுரு ஒருசில தடவைகள் யோவேலை மேற்கோள்காட்டி, ஒரே நேரத்தில் 3000 ஆத்துமாக்களை இயேசு கிறிஸ்துவுக்கு ஆதாயம் பண்ணினான். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்: அவன் பேதைமையுள்ளவனும், படிப்பறியாதவனுமாயிருந்தான். எனவே நீங்கள் பெரிய கல்விகளையும் அவைகளைக் குறித்த மிகப் பெரிய காரியத்திற்கும் போக வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இயேசுவை அறிந்து கொள்வது தான், அப்போது அப்படிப்பட்டவைகளைச் செய்யும்படியாக, கிறிஸ்து பரிசுத்த ஆவியின் மூலமாக உங்களுக்கு திறமையைத் (ability) தந்தருளுவார். 19. இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலும் அதே அடிப்படையின் பேரில் தான் உள்ளது. உண்மையாகவே தெய்வீக சுகமளித்தலை விசுவாசித்து, தெய்வீக சுகமளித்தலுக்காக ஜெபம் பண்ணினாலும், ஒருபோதும் தெய்வீக சுகமளித்தலைத் தொட முடியாத சில ஜனங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஏனென்றால் அவர்களால் அதைச் செய்ய முடியாது. அது அவர்களுக்கு அருளப் பட்டிருக்கவில்லை. இப்பொழுது, அங்கே அப்படிப் பட்டதொரு... நான் மேடையின் மேல் இருக்கும் ஜனங்களைக் கவனிப்பதுண்டு. சிலசமயங்களில் அபிஷேகமானது மிகவும் மகத்தானதாக இருந்து, அவர்கள் என்னை வெளியே நடத்திச் செல்ல வேண்டியிருக்கும் அளவுக்கு ஆவியானவர் என்னை பலமாக ஆட்கொள்ளுவதற்கு முன்பாகவே... இப்பொழுது, நான் அந்த நபரைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவர்களில் சிலர் வருகிறார்கள், அநேக நேரங்களில், நான் காணும் காரியங்கள் எதையும் கூறுவதில்லை. ஜனங்கள் விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ளப் போதுமானதையே நான் கூற முயற்சிக்கிறேன்; நான் அவ்விதமாக அவர்களுடைய கவனத்தைப் பற்றிக்கொள்வதைக் கண்டிருக்கிறேன், பிறகு வேறொருவரைப் பற்றிப் பிடித்துக் கொள்வற்காக அவர்களுக்காக ஜெபிப்பேன். நீங்கள் அதிகமாகப் பேச, ஏன், அதிகமாக அது வரும், அப்படியே அது தொடர்ந்து... அப்போது நீங்கள் அப்படியே அந்த வாய்க்காலில் இருக்கிறீர்கள், அது அப்படியே தொடர்ந்து சுழன்றபடி இறங்கிக் கொண்டிருக்கும். எனவே பிறகு, தெய்வீக சுகமளித்தலைப் போதித்து, ஜனங்கள் வருவதைக் காணும்போது, அவர்கள், "ஓ ஆமாம், சகோதரனே, எனக்கு விசுவாசம் உண்டு" என்று கூறுவார்கள். இப்பொழுது, அவர்களுக்கு விசுவாசம் இருப்பதாக அவர்கள் கற்பனை செய்து கொள்கிறார்கள். பாருங்கள்? அவர்களுக்கு விசுவாசம் இருப்பதில்லை. 20. இந்த சாய்வு மேஜை இங்கேயுள்ளது என்று அறிந்துகொள்ளும்படி, உங்களுடைய கண்பார்வையோ அல்லது என்னுடைய உணர்வுகளோ எவ்வளவு நிச்சயமாக இருக்கிறதோ அவ்வளவு நிச்சயமாக விசுவாசமும் இருக்கிறது. நீங்கள் கல்வி பெற்றிருக்க வேண்டியதில்லை. வெளிப்படையாகவே, நீங்கள் உண்மையில் எப்படியிருக்கிறீர்களோ, அதைக் காட்டிலும் இதைக் குறித்து சற்று அதிக எளிமையாக நீங்கள் இருப்பீர்களானால். அது சரியே. அப்படியே நீங்கள்... நீங்கள்... அது இருக்கப் போகிறது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் ஏதோவொன்றாக அது இருக்கிறது. அவ்வளவு தான். அது அப்படியே உறுதியானதாக உள்ளது... ஏன், அதை உங்கள் பாதையை விட்டு வெளியே போகச் செய்ய எதுவுமேயிருக்க முடியாது. அது சம்பவிக்கப் போகிறது என்று உங்களுக்குத் தெரியும். எதுவுமே அதை எடுத்துப்போட முடியாது. மருத்துவர்கள் நின்று, நீங்கள் அடுத்த மணி நேரத்தில் மரிக்கப் போகிறீர்கள் என்று கூறுவார்களானாலும், நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும்... நீங்கள் புற்றுநோயினால் முழுவதுமாக மூடப்பட்டு விட்டீர்கள் என்றும், குஷ்டரோகம் உங்களினூடாக தின்றுவிட்டிருக்கிறது என்றும் அவர் உங்களிடம் கூறினாலும். அது உங்களை துளியும் பயமடையச் செய்யாது. இல்லை, ஐயா. இப்பொழுது, அதுதான் விசுவாசமாகும். 21. பவுல் அங்கே வெளியே கப்பல் சேதத்தில் இருந்தபோது, அவனைப் பாருங்கள். ஏன், அவனும் கூட நம்பிக்கையை இழந்துவிட்டான். அவர்கள் காப்பாற்றப்படக்கூடியதாக இருந்த எல்லா நம்பிக்கையும் அற்றுப்போனதாக பவுல் கூறினான். அந்தச் சிறிய பழைய கப்பலானது தண்ணீரால் நிரம்பி விட்டது, பதினான்கு நாட்கள் இரவும் பகலும் சந்திரனோ, நட்சத்திரங்களோ, அல்லது எதுவுமேயில்லை, அந்தச் சிறிய கப்பலானது அங்குமிங்கும் தண்ணீரில் தூக்கிவீசி எறியப்பட்டும், மற்றும் எல்லாமுமாக ஆகிக் கொண்டிருந்தது, அப்போது பவுல், "நல்லது, எல்லா நம்பிக்கையும் அற்றுப்போய்விட்டது என்று நினைக்கிறேன்" என்றான். அவ்வண்ணமாக அவனுக்குத் தெரியாதிருந்தது. ஆனால் அந்த இரவிலே, அவன் கீழே நீண்ட தாழ்வாரத்தில் நின்று, ஜெபித்துக் கொண்டிருந்த போது, ஒரு தரிசனம் அவனுக்கு முன்பாக வந்தது. கர்த்தருடைய தூதனானவர், "பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக கொண்டுசெல்லப்படப் போகிறாய்" என்று கூறுவதை அவன் கண்டான். அது சரியே. "கவனியுங்கள், தேவன் அருளுகிறார்... உன்னோடு கடற்பயணம் செய்யும் இவர்கள் எல்லாரும் உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனபடியால் திடமனதாயிரு. நீ தொடர்ந்து வெளியே சென்று திடமனதாயிரு." 22. அந்தச் சிறு வயதான பவுல், சரியாக அந்தப் புயலின் மத்தியிலும் வெளியே ஓடிச்சென்று, அவனுடைய கரங்களை அசைத்துக்காட்டி, அவனுடைய உச்சக்குரலில் சத்தமிட்டு, "சகோதரனே, திடமனதாயிரு, சென்ற இரவில் தேவனுடைய தூதனானவர் அங்கே நின்று, பயப்பட வேண்டாம் என்று கூறினார். நாம் இராயனுக்கு முன்பாக போகப் போகிறோம். இப்பொழுது, உங்களில் ஒருவரும் மரிக்கப் போவதில்லை என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். உங்கள் தலையிலுள்ள ஒரு மயிரும் அழிந்து போவதில்லை, ஆனால் நாம்... இருக்கப் போகிறோம். கப்பலானது ஏதோவொரு இடத்தில் சிதைந்து சேதமடையப் போகிறது. அந்தத் தரிசனத்தில், அது தகர்ந்து போய், கடற்கரையிலுள்ள ஏதோவொரு இடத்தில் இருப்பதைக் கண்டேன், ஆனால் எதுவுமே நமக்குத் தீங்கு செய்யப் போவதில்லை. நாம் எதையாகிலும் எடுத்து சாப்பிடுவோம்" என்றான். அவர்கள்... ஓ, அவர்களோ அதைச் செய்ய பயந்தார்கள். பவுல் போய், சாண்ட்விச்சை எடுத்து, அதை சமைத்து, புசிக்கத் தொடங்கினான். ஏன், அவன் பயப்படவேயில்லை. ஏன்? தேவன் அவ்வாறு சொல்லி விட்டார். அது பவுலுடைய இருதயத்தில் நங்கூரமிடப்பட்டு விட்டது. எனக்குக் கவலையில்லை; அந்தக் கப்பலானது அதனால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு கொடியதாக விசையுடன் வேகமாக சுழற்றி, தூக்கி வீசியெறியப்பட்டுக் கொண்டிருந்தது. நட்சத்திரங்களோ, சந்திரனோ எதுவுமில்லை, நாட்கள் கழிந்து கொண்டிருந்தன, அது பவுலை துளியும் கவலைப்படுத்தவேயில்லை. ஒன்றுக்குப்பின் மற்றொரு சாண்ட்விச்சாக, கப்பலின் மேல்தளத்தில் மேலும் கீழும் நடந்து, "தேவனுக்கு மகிமை, சகோதரர்களே, நாம் கரையிலிருந்து (அதிக) தூரத்தில் இல்லை" என்று கூறிக்கொண்டிருப்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். 23. அங்கே தான் காரியம், அது எவ்வளவு இருளாக இருந்தாலும், அது ஒரு பொருட்டேயல்ல. திமிங்கலம் அந்தக் கப்பலைக் கவிழ்த்துப்போட மேலே வரலாம், நூற்றுக்கணக்கான சுறாமீன்கள் அவைகளைப் பின்தொடரலாம், அது பவுலை தொந்தரவு செய்யாது. இல்லை, ஐயா. தேவன் என்ன கூறியிருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். தேவன் சொல்லியிருந்ததை அவன் விசுவாசித்தான். "அதனால், சகோதரர்களே, திடமனதாயிருங்கள், அவர் எனக்கு அதைக் காண்பித்தவண்ணமாகவே சம்பவிக்கும் என்று நான் தேவனை விசுவாசிக்கிறேன்" என்றான். அங்கே தான் விசுவாசம் இருக்கிறது. அங்கே வெளியிலிருந்த அந்தச் சிறுதீவுக்குப் போய், தீயில் போடுவதற்காக ஒரு குவியல் சுள்ளிகளை எடுத்தபோது, அந்த சுள்ளிகளில் உஷ்ணம் பட்டதால், ஒரு பெரிய பாம்பு, அது உங்களைக் கடிக்கும் போது, அது உங்களைத் தாக்கினபிறகு, நீங்கள் வெறுமனே ஓரிரு நொடிகள் மட்டுமே ஜீவனோடிருப்பீர்கள். அது அமெரிக்க கொடிய விஷத் தன்மையுள்ள பாம்பைப் (mamba) போன்று இருந்திருக்க வேண்டும். அதில் ஒன்று உங்களைக் கடித்த பிறகு, சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தான் ஜீவனோடிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அந்த நிணநீரோ, அல்லது நிணநீர் இல்லாமல் இருந்தாலும், உங்களால் ஏறக்குறைய அவ்வளவு நேரம் தான் ஜீவிக்க முடியும். அது அவனுடைய கையை கவ்விக்கொண்டது. பவுல் அதை நோக்கிப் பார்த்து, "நான் கட்டாயம் இராயனுக்கு முன்பாக கொண்டுபோகப்பட்டாக வேண்டும் என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். ஏன், நீ எனக்குத் தீங்குசெய்ய முடியாது" என்று கூறி, அதை தீயிலே உதறிப் போட்டுவிட்டு, சென்று, இன்னும் மேலும் சில விறகுகளைப் பொறுக்கி, திரும்பிவந்து, எப்பொழுதாவது எதுவும் சம்பவித்திராதது போல, குளிர் காய்ந்து கொண்டிருந்தான். நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா? தேவன் பவுலிடம், "நீ இராயனுக்கு முன்பாக கொண்டுபோகப்பட வேண்டும்" என்று கூறினார். பவுல் இன்னும் இராயனுக்கு முன்பாக கொண்டு போகப்பட்டிருக்கவில்லை, இந்நிலையிலும் எதுவுமே பவுலைத் தொல்லைப்படுத்துவதில்லை. அவன் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான். இப்பொழுது, அதுதான் விசுவாசம். நீங்கள் உங்கள் செல்லும் திசையை நிர்ணயித்துவிட்டீர்கள் (set). நீங்கள் சரியாக எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் அந்த நிலையை அடையும் மட்டுமாக, ஒரு தனிப்பட்ட நபரால் ஜெபிக்க முடியுமானால், சகோதரனே, நீங்கள் வியாதியஸ்தராகவே தொடர்ந்து இருக்கப் போகிறீர்கள் என்று உங்களிடம் கூறும்படி சிகாகோவில் போதுமான மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். அது சரியே. 24. ஒரு முடமான நபரைக் கண்டுபிடிக்கும்படியாக நான் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். நான்... இதோ இங்கே ஒரு ஊன்றுகோல் இருக்கிறது, அது அநேகமாக யாரோ முடமான ஒரு பெண்மணியினுடையது என்று நம்புகிறேன். சகோதரியே, நீ இந்தப் பிற்பகலில், அந்த ஊன்றுகோல்களை அதோ அங்கே தெருவின் நடுவிலே எறிந்து, இனிமேலும் அதை உபயோகிக்காமல் வீட்டிற்கு நடந்து போகும்படியாக, இங்கிருந்து வெளியே போகப் போகிறாய் என்று பரிசுத்த ஆவியானவர் சற்றுமுன்பு உனக்கு வெளிப்படுத்தியிருப்பாரானால், அது அவ்வண்ணமாக நேரடியாகவே உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும், அப்போது நீ அநேகமாக அங்கிருந்து எழும்புவதற்கும் கூட முன்பாகவே, அந்தப் பழைய ஊன்றுகோலுக்கு முத்தமிட்டு, பிரியாவிடை வாழ்த்து கூறியிருப்பாய். நீ ஜனங்களிடம் திரும்பி, "ஒருக்கால், நான் இன்ன-இன்ன பிரகாரமாக, அல்லது மிகவும் அதிகமாக நடந்தது கிடையாது" என்று கூறுவாய். புரிகிறதா? உனக்கு அது தெரிந்திருக்கும். அப்போது உன்னை நிறுத்தக்கூடியது எதுவுமேயிருக்காது. இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசி, "அந்த பெண்" என்று கூறியிருப்பாரானால், நான் தரிசனத்தின் மூலமாக, அவள் அந்தக் கதவுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருப்பதைக் காண்கிறேன், அதைக் கூறுவதற்கு எனக்கு வேறு கொஞ்ச பயமும் இருந்திருக்காது, இங்கே 100 மில்லியன் ஜனங்கள் இருந்தாலும், "அந்தப் பெண் மிக நீண்ட காலம் முடமாக இருந்து வருகிறாள், அல்லது அவள்...?... அவளுக்கு என்ன தவறு நேர்ந்திருக்கிறது என்பதை நான் அறிவேன். அது என்னவாக இருந்தாலும், அவள் இங்கிருந்து வெளியே போவாள். நடக்க உதவும் அந்த ஊன்றுகோல் அல்லது அவளுடைய கையின் கீழ் அவள் வைத்திருக்கிற அந்த கக்கதண்டம் இல்லாமலே, வெளியில் இருப்பாள்; அவள் சுகமடைந்தவளாக வெளியே போய்க் கொண்டிருக்கிறாள்" என்று கூறியிருப்பேன். ஏன், அங்கே எந்த பயமும் இருந்திருக்காது, எது என்னவாக இருந்தாலும் எதுவுமே இருந்திருக்காது. பாருங்கள்? அதுதான் விசுவாசம். 25. ஆனால் இப்பொழுது, நீங்கள் வந்து, "ஓ, தேவன் ஒரு சுகமளிப்பவர் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறும்போது. நீங்கள் பாருங்கள், அங்கே உங்களுக்குள் இரண்டு மனிதர்கள் இருக்கிறார்கள், அது உங்களுக்குத் தெரியுமா? ஒருசமயம் கூட்டத்தில் மனமாற்றமடைந்த ஒரு இந்தியனை நாங்கள் கொண்டிருந்தோம், அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றபிறகு, அவன் எப்படி போய்க் கொண்டிருக்கிறான் என்று அவனிடம் கேட்டேன். அவன், "நல்லது, எனக்குள்ளே இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவைகளில் ஒன்று ஒரு-ஒரு பொல்லாத நாயாகவும், அவைகளில் ஒன்று ஒரு நல்ல நாயுமாக இருக்கிறது. அவைகள் எல்லா நேரமும் மட்டுமீறிய அமளி உண்டாக்கி, சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன" என்றான். அவன் (நான்), "ஏன், தலைவரே, எந்த நாய் வெற்றி பெறுகிறது?" என்று கேட்டேன். அவர் சொன்னார், தலைவர், "நல்லது, தலைவர் எந்த நாய்க்கு மிக அதிக உணவு ஊட்டுகிறாரோ அதைப் பொறுத்தது" என்று கூறினார். நல்லது, பிசாசுக்கும் பரிசுத்த ஆவிக்கும் அதை நாய்களுக்கு ஒப்பிடுவது போன்று, எந்த ஒப்பீட்டையும் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை, ஆனால் கவனியுங்கள், உங்களுக்குள்ளே நல்லதும் இருக்கிறது, பொல்லாததும் இருக்கிறது. அங்கே விசுவாசமும் அவிசுவாசமும் இருக்கிறது. அது எந்த ஒன்றை நீங்கள் அதிகம் போஷிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது (அவ்வளவு தான்), எந்த ஒன்றை நீங்கள் அதிகம் போஷிக்கிறீர்கள் என்பது. 26. இப்பொழுது, உங்களுக்குள், இங்கே மேலே, இந்தப் பிற்பகலில் இங்கேயிருக்கும் ஒவ்வொரு நபரும், உங்கள் ஒவ்வொருவரும், தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள், "நிச்சயமாக, சகோதரன் பிரன்ஹாமே, நான் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கிறேன்" என்று கூறலாம். இப்பொழுது, ஒருக்கால், அதை எவ்வாறு பேசுவது என்று உங்களுக்குத் தெரிந்த எல்லா அறிவுத் திறனையும் கொண்டு நீங்கள் அதைப் பொருள்கொண்டிருக்கலாம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். அதுவோ உங்கள் தலையில் தான் இருக்கிறது. ஆனால் அங்கே கீழே ஆழ்மனதின் அரை உணர்வுத்தளம் (subconscious) இருக்கிறது என்பது நினைவிருக்கட்டும், அதுவும் அதே காரியத்தையே கூறியாக வேண்டும். அதுவும் அதையே கூறாவிட்டால், நீங்கள் ஒருபோதும் எங்குமே போவதில்லை. நீங்கள் வேதாகமத்தை வாசித்து, "நல்லது, இதோ சகோதரன் பிரன்ஹாமே, வேதாகமம் இவ்வாறு கூறுகிறது" என்று கூறலாம். அது உண்மைதான். அது முற்றிலும் சரியே. அங்கு தான் ஜனங்கள் இன்றைக்கு, "நல்லது, இயேசு கிறிஸ்துவே தேவ குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன், நான் இரட்சிக்கப்பட்டேன்" என்று கூறுகிறார்கள். "அவர் தேவ குமாரன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" "வேதாகமம் அவ்வண்ணமாகக் கூறுகிறது." பாருங்கள்? மேலும் நான், "நல்லது, அவர் தேவனுடைய குமாரன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்" என்று கேட்கிறேன். "அம்மா அப்படிச் சொன்னார்கள். பிரசங்கியார் அவ்வாறு கூறினார்." நல்லது, அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வது மட்டுமாக, உங்களால் அதை அறிந்துகொள்ள முடியாது என்று வேதாகமம் கூறுகிறது. நீங்கள் வேறு யாரோ ஒருவருடைய வார்த்தையை மாத்திரமே ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். அதை நீங்களே அறிந்து கொண்டீர்களா? அது மிகவும் நன்றாகப் போகவில்லையே. ஆனால் அதுதான் சத்தியமாக இருக்கிறது. இதை மேற்கோள் காட்டுகிறேன், "பரிசுத்த ஆவியினால் மாத்திரமேயன்றி, ஒருவனும் இயேசுவை கிறிஸ்து என்று சொல்லக்கூடாது." அது சரிதானா? உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி தான் உயிர்த்தெழுதலைக் குறித்தும், இயேசுவே தேவ குமாரனாக இருக்கிறார் என்பதைக் குறித்தும் சாட்சி கொடுத்தாக வேண்டும், அல்லது நீங்கள் அதற்காக வேறு யாரோ ஒருவருடைய வார்த்தையை மாத்திரமே எடுத்துக்கொள்கிறீர்கள். வேதாகமம் என்ன கூறுகிறதோ அதை மாத்திரமே நீங்கள் எடுக்கிறீர்கள். வேதாகமம் தான் சரியாக உள்ளது. அல்லது நீங்கள் ஊழியக்காரர் என்ன கூறுகிறார் என்பதை மாத்திரமே எடுத்துக்கொள்கிறீர்கள். ஊழியக்காரர் சரியாகத்தான் இருக்கிறார். அல்லது மற்ற எவராவது, வேறு யாரோ ஒரு நல்ல நபர் என்ன கூறியுள்ளார் என்பதை மாத்திரமே எடுத்துகொள்கிறீர்கள். அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள், பரிசுத்த ஆவியானவர் அதை உங்களுக்கு கொண்டுவருமட்டாக, ஒரு தனிப்பட்ட நபர் இயேசுவே கிறிஸ்து என்பதை அறிந்துகொள்ளவே மாட்டான். அது சரியே. 27. இப்பொழுது கவனியுங்கள், ஒரு மனிதன் சுகமடையப் போகிறான் என்று, பரிசுத்த ஆவியினால் அவனுக்கு வெளிப்படுவது மட்டுமாக, சுகமளித்தலுக்கான விசுவாசத்தை எந்த மனிதனும் கொண்டிருக்கவே முடியாது. நீங்கள் தடுமாறிக் கொண்டிருக்கலாம். நீங்கள் ஜீவியத்தை ஆராய்ந்து பார்த்து, ஒரு-ஒரு நல்ல கிறிஸ்தவ ஜீவியத்தை வாழ்ந்து கொண்டிருக்கலாம். நீங்கள் ஏதோவொரு சபையைச் சேர்ந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு அருமையான அங்கத்தினராக இருக்கலாம். நீங்கள் ஒரு ஒழுக்கமான குணத்தை உடையவர்களாகவும், அந்த எல்லாவற்றையும் கொண்டவர்களாகவும் இருக்கலாம், ஆனால் சகோதரனே, அது அப்பொழுதும் கிறிஸ்தவம் அல்ல. கிறிஸ்தவம் என்பது பரிசுத்த ஆவியானவர் முழுமையாக ஆட்கொண்டிருந்து, நீங்கள் பரிசுத்த ஆவியால் நடத்தப்படும் போதுதான். எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், எவ்வளவு ஒழுக்கம் உடையவர்களாக இருந்தாலும், எவ்வளவு நல்லதொரு சபை அங்கத்தினராக இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல... எந்த சபை அங்கத்திரையும் போன்று காயீன் அவ்வளவு நல்லவனாகத்தான் இருந்தான். அவ்வாறே ஏசாவும் இருந்தான், அவன் அருமையான நற்பண்புகள் கொண்ட (நாகரீகமான) நற்குடி பெருமகனாகத்தான் இருந்தான். அவ்வாறே காயீனும் மிகவும் பக்தியுள்ளவனாகவும், தேவனிடம் விசுவாசம் உள்ளவனாகவும், பலி செலுத்தி, ஒரு சபை பலிபீடத்தைக் கட்டி, செய்தான் - பக்தியாக இருக்கும் எல்லாவற்றையும் செய்தான், தேவனோ அவனைப் புறக்கணித்து விட்டார். பரிசுத்த ஆவியினால் மாத்திரமே அன்றி, ஒருவனும் இயேசுவை கிறிஸ்து என்று சொல்ல முடியாது. பேதுரு நீதிமானாக்கப்பட்டு, கர்த்தராகிய இயேசுவின் பேரில் விசுவாசம் வைத்திருந்தான். அவன் சுவிசேஷத்தைக் கூட பிரசங்கம் பண்ணினான், ஆனால் இயேசுவோ அவனிடம், "நீ மனமாற்றமடைந்த பின்பு, உன் சகோதரர்களை ஸ்திரப்படுத்து" என்று கூறினார். புரிகிறதா? "நீ மனமாற்றமடைந்த பின்பு (After you are converted)..." மனமாற்றம் (Conversion) என்பது பரிசுத்த ஆவியானவர் பழைய சுபாவத்தை வெளியே தள்ளிவிட, புதிய சுபாவம் உள்ளே வருவதாகும், அதுதான் பரிசுத்த ஆவி. ஒரு மனிதன் உண்மையாகவே தேவனுடைய ஆவியால் பிறந்திருக்கிறான் என்றால், அவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான். இயேசு அவ்வண்ணமாகக் கூறியிருக்கிறார். "என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு (பரிசுத்த ஆவியினாலே அன்றி, எந்த மனிதனாலும் அதைக் கூற முடியாது)... என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல் அல்லது நியாயத்தீர்ப்புக்கு உட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." அதைத் தான் அவர் சொல்லியிருக்கிறார். நான் அவரை விசுவாசிக்கிறேன், நீங்களும் இல்லையா? 28. அதுபோல சமீபத்தில் யாரோ ஒருவர், "சகோதரன் பிரன்ஹாமே, நாங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் மற்றும் அதைப்போன்ற மற்றவைகளாகவும் இருக்கிறேன் என்று விசுவாசிக்கிறேன்" என்று கூறினார். நல்லது, உங்களிடம் பரிசுத்த ஆவி இருந்தாலொழிய உங்களால் எப்படி விசுவாசிக்க முடியும்? உங்களால் சரியாக விசுவாசிக்க முடியாது. இப்பொழுது, அங்கேதான் குறைபாடு இருக்கிறது. கிறிஸ்தவன் தாவியேறி மேற்செல்லாமல் இருக்கும் ஒரு காரியம் உண்டு. வியாதிப்பட்ட நபர் தாவியேறி மேற்செல்லாமல் இருக்கும் ஒரு காரியம் உள்ளது. பாருங்கள்? தேவனுடைய வார்த்தையை நோக்கிப்பார்ப்பதற்கும் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. நீங்கள்... வார்த்தையை ஏற்றுக்கொள்பவர்கள் தான், அதை கூர்ந்து ஆராய்ந்து விசாரணை செய்பவர்கள் அல்ல, ஆனால் அதை ஏற்றுக்கொள்பவர்கள், அவர்களைத்தான் தேவன் இரட்சிக்கப்பட்டவர்களாக சபையில் சேர்த்தார். மூவாயிரம் ஆத்துமாக்கள் வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள். இப்பொழுது, வார்த்தை பிரசங்கிக்கப்படுவதற்கு உங்களால் செவிகொடுக்க முடியும். நீங்கள் அதை நோக்கிப்பார்த்து, அது சரிதான் என்று ஒப்புக்கொள்ள முடியும். காயீனும் அதைச் செய்தான்; மற்ற எல்லாரும் அதையே செய்தார்கள். ஆனால் அப்படியே வார்த்தையானது எங்கே விழுந்து, பிறப்பிக்கிறதோ. அதை ஏற்றுக்கொண்டவர்கள் சந்தோஷமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். பாருங்கள்? வார்த்தையை ஏற்றுக் கொள்ளுதல். 29. இப்பொழுது, உங்கள் வியாதிக்காக இயேசு கிறிஸ்து மரித்தார் என்ற ஊக்குவித்தலை நீங்கள் பெற்றுக்கொள்ளும் போது, அந்த அதே மணிவேளையிலேயே உங்கள் சுகம் வந்துவிட்டது. அது சரியே. இயேசு உங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்று நீங்கள் பரலோகத்திலிருந்து பெற்றுக்கொண்டு, நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளும் போது, உங்களுக்காக எந்த ஜெபமும் அவசியமிருக்காது. நீங்கள் ஏற்கனவே அதை ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். அது தீர்க்கப்பட்டு விட்டது. இப்பொழுது, நாம் வார்த்தையைப் பிரசங்கம் பண்ணலாம், வார்த்தையை புரியும்படி விளக்கிக் கூறலாம். ஓ, அல்லேலூயா. அதுதான் அதை கொழுந்துவிட்டு எரிய வைக்கிறது. நீங்கள் அதை, அந்த வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் போது, ஏதோவொன்று அதோ அங்கேயிருக்கிற காணக்கூடாத உலகத்தை விட்டு நழுவி வந்து, ஒரு விசித்திரமான வாய்க்கால் வழியாக வந்து, சுழன்று கொண்டே இறங்கி, "இப்பொழுது நான் அதைக் காண்கிறேன்" என்று கூறும், ஏதோவொரு இடத்திலிருக்கும் உங்கள் ஆத்துமாவுக்குள் வருகிறது. அப்போது உங்கள் கண்கள் பிரகாசமாக இருக்கிறது; தொங்கிக் கொண்டிருந்த உங்கள் உதடுகள் நிமிர்ந்து நேராகவும் ஆகி, புன்னகை பூக்கிறது. உங்கள் சரீரத்திலுள்ள ஒவ்வொரு தசையும் களிகூருவதாகத் தோன்றுகிறது. அப்போது ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது. ஏதோவொன்று... அப்போது நீங்கள் ஒரு ஜெப வரிசையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அப்போதே அதைப் பெற்று விட்டீர்கள். 30. இப்பொழுது, அங்கேதான்... இந்நேரத்தில், இக்கட்டிடத்திலுள்ள எல்லாரும், அம்மாத்திரியான ஒரு மனப்பான்மைக்குள் வந்திருப்பார்களானால், ஒவ்வொரு நபரும் பரிபூரணமாக சுகமடைந்து விடுவார்கள். இப்பொழுது, நாம் எவ்வாறு ஜனங்களை அந்தவிதமாக கொண்டுவருவது? சிலரால் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். சிலரால் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அதைப் பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள், அவர்கள் தான் அதைக் நோக்கிப் பார்த்து, அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசிக்கிறார்கள். மற்றவர்கள், ஒருக்கால் மற்ற கூட்டத்தில் இருக்கலாம். இப்பொழுது, அதைப் பிரசங்கம் பண்ணும் ஒரு வழி, வார்த்தையின் மூலமாகத்தான். வேறொரு வழி என்னவென்றால், ஒருக்கால், யாரோ ஒருவர் அந்நிய பாஷைகளில் பேசி, அவர்கள் ஒரு வியாக்கியானம் பண்ணி, அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். அல்லது ஒருக்கால், ஒரு தீர்க்கதரிசியாக இருந்த யாரோ ஒருவர் நின்று, நீங்கள் மேலே நோக்கிப் பார்த்து, "ஓ, அதோ அது இருக்கிறது. அதோ அது இருக்கிறது" என்று கூறும்படியான இயற்கைக்கு மேம்பட்டதாக உள்ள ஏதோவொன்றைச் செய்யலாம். அப்போது ஏதோவொன்று உங்களுக்கு சம்பவிக்கிறது. ஆனால் நீங்கள் அங்கேயிருந்து, "உம், அது மாற்றார் உளம் அறியும் சிறப்பாற்றல் (mental telepathy) தான். ஓ, எனக்குத் தெரியும், டாக்டர் பட்டம் பெற்ற ஜோன்ஸ் அவர்கள் அவ்வண்ணமாக கூறினார்" என்று கூறுகிறீர்கள். சகோதரனே, அப்போது நீங்கள் ஒரு ஆபத்தான இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு பயங்கரமான இடத்தில் இருக்கிறீர்கள். அதெல்லாம் பயனற்ற குப்பைகூளம் என்றும், அதைப்போன்றவைகளையும் நீங்கள் கூறலாம். ஆனால் நியாயத்தீர்ப்பின் நாளிலே, நீங்கள் அதற்காக பதில் கூறுவீர்கள். அது சரியே. மேலும், தேவன் தம்முடைய வெளிப்பாட்டை செய்து, தமது ஜனங்களுக்கு தம்மைத்தாமே வெளிப்படுத்தும் போது... இப்பொழுது, அதுதான் கூட்டங்களில் கிடைக்கும் பலனாக இருக்கிறது. அதற்காகத்தான் தேவன் வரங்களைக் கொடுத்தார், அவரை மகிமைப்படுத்தவும், ஜனங்களை ஒருங்கிணைக்கவும் (unify), சரீரத்தை ஒன்றாகக் கொண்டுவரவும், நம்முடைய பிரயாசங்களையும் நம்முடைய ஜெபங்களையும் ஒன்றுசேர்க்க நமக்கு உதவுசெய்யும்படியும் தான் அந்த வரங்கள் கொடுக்கப்பட்டன. இவ்விதமாக ஒரு கூட்ட ஜனங்களிடம் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு நபர், அங்கே ஒவ்வொரு பக்கத்திலும் விசுவாசம் ஒன்று திரளுகிறது, அது நீங்கள் சுகம்பெற உதவி செய்யும். வார்த்தையானது போதிக்கப்படுவதை கவனமாய்க் கேட்டு, ஒருபோதும் ஜெபவரிசையில் இருக்காமல், இருப்பினும் சுகமடையும் ஜனங்களும் அங்கே இருக்கத்தான் செய்வார்கள். ஒருக்கால் அதைக் குறித்து அவர்கள் உணர்ந்து கொள்ளவும் கூடச் செய்யாத ஏதோவொன்று ஆழ் மனதில் (subconsciously) சம்பவித்துவிடுகிறது. அப்போது அவர்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்வார்கள். யாரோ ஒருவர் உட்கார்ந்துகொண்டு, கர்த்தருடைய அடையாளங்களில் ஒன்று வெளிப்படையாக தோன்றுவதை கவனிக்கிறார், [சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய விரல்களைச் சொடுக்கிறார் - ஆசிரியர்] அப்போது அவர்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்கிறார். பாருங்கள்? அது விசுவாசம் இருக்கும் போதுதான், விசுவாசத்தை ஊக்குவிக்கக் கூடிய ஏதோவொன்று... 31. இப்பொழுது, இங்கே என்னுடைய கையிலிருக்கும் கோதுமையை என்னால் பார்க்க முடிகிறது; அது கோதுமை தான் என்று நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். அது கோதுமை என்று என்னால் கூற முடியும். என்னால் அதை நிலத்திற்குக் காட்ட முடிந்து, நிலமும் அதைப் பார்க்க முடிந்திருக்குமானால், அது, "ஆமாம், அது கோதுமை தான். அது கோதுமை என்று, அதன் ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறியிருக்கும். ஆனால் இந்தக் கோதுமையானது நிலத்திற்குள் விழுந்து, அதுதாமே மரிக்கும் வரையில், அந்த கோதுமையால் ஒருபோதும் கோதுமையை விளைவிக்க முடியாது. அது சரிதானா? அதாவது மனிதன் அடிப்படையாக, "ஆமாம், நான் சுகமளித்தலை விசுவாசிக்கிறேன். அது சரிதான் என்று விசுவாசிக்கிறேன். அது தேவனுடைய வார்த்தை என்று விசுவாசிக்கிறேன். அதைப் பெற்றுக்கொள்ள என்னிடம் விசுவாசம் உண்டு என்று விசுவாசிக்கிறேன்" என்று கூறிக் கொண்டிருக்கிறான். ஆனால் நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளும்மட்டுமாக... நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா? பிறகு நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளும் போது, களிகூருகிறீர்கள். வார்த்தையானது அங்கே உள்ளே உள்ளது; அது தீர்த்துவைக்கிறது; எல்லா சந்தேகங்களும் மரித்துப்போய் விட்டன; வித்துக்களின் எல்லா புறத்தோடும் விழுந்துவிடுகிறது; திடீரென்று புது ஜீவன் தோன்றி எழும்பி வந்து, உங்களுக்கான சுகமளித்தலுக்குள் வளர்ந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் நீங்கள் உண்மையிலேயே உங்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்கிறீர்கள். அங்கிருந்து தான் சுகம் வருகிறது. விசுவாசம் கேள்வியினால், வார்த்தையைக் கேட்பதன் மூலமாக வருகிறது. 32. இப்பொழுது, விசுவாசம் என்பது சுகமளித்தல் அல்ல. விசுவாசம் சுகமளித்தலைப் பிறப்பிக்கிறது. புரிகிறதா? விசுவாசத்தினாலே, நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இப்பொழுது கவனியுங்கள், கால் டாலர் (quarter) பெறுமானமுள்ள ரொட்டித் துண்டு இங்கே இருக்குமானால். அதனுடைய விலை ஏறக்குறைய அதுதான் என்று நம்புகிறேன். என்னிடம் 25 சென்ட் காசுகள் உள்ளன. இப்பொழுது, 25 சென்ட் காசுகள் என்பது அந்த ரொட்டியை வாங்குவதற்கான விலையாக உள்ளது, ஆனால் என்னிடம் 25 சென்ட் காசுகள் உள்ளன, ஆனால் அந்த ரொட்டியை நான் பெற்றிருக்கவில்லை. இப்பொழுது, சுகமளித்தலுக்கான விசுவாசம் உங்களுக்கு இருக்கலாம், உங்களில் அநேகருக்கு அது இருக்கிறது என்று நம்புகிறேன். ஆனால் நீங்கள் உங்களிடம் இருக்கும் விசுவாசத்தைக் கொண்டு, சுகத்தை வாங்கி கொள்முதல் செய்யும் (purchase) மட்டுமாக, உங்களால் சுகத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. நீங்கள், "ஓ, சகோதரன் பிரன்ஹாமே, நான் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க விரும்பினேன். நான் அதைப் பெற்றுக்கொள்வதற்கான விசுவாசம் என்னிடம் உள்ளது" என்று கூறலாம். நல்லது அப்படியானால், பரிசுத்த ஆவிக்காக உங்கள் விசுவாசத்தை அப்படியே பரிமாற்ற வணிகம் (swap) செய்துவிடுங்கள். பாருங்கள்? நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவ்வளவு தான். அந்த விசுவாசம் உங்களிடம் இருக்கும்போது, அதை எதுவுமே உங்களை விட்டு எடுத்துப்போட முடியாது. இப்பொழுது, நீங்கள் விசுவாசிப்பதைச் செய்வீர்கள் என்றால், நீங்கள் - நீங்கள் போலியாக நடித்து பாவனை செய்து கொண்டிருந்து, நீங்கள் ஊகித்துக் கொண்டிருப்பீர்களானால், அது உங்களுக்கு கிரியை செய்யாது. ஆனால் அது உண்மையான விசுவாசமாக இருக்குமானால், அது-அது முடிந்துவிட்டது. தேவன் சரியாக அப்போதே அதைச் செய்வார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள், "ஓ, ஆமாம், சகோதரன் பிரன்ஹாமே, தெய்வீக சுகமளித்தலை நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறும் போது. சரி, நீங்கள் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிப்பீர்களானால், தெய்வீக சுகமளித்தலில் உங்களிடம் இருக்கும் அதே விசுவாசத்தை எடுத்து, உங்கள் சுகத்தை விலைக்கு வாங்கி விடுங்கள் (purchase). புரிகிறதா? விசுவாசத்தினாலே நீங்கள் அதைப் பெற்றுக்கொள்கிறீர்கள்... நிச்சயமாக. 33. யாரோ ஒருவர் சொன்னார், நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். நிச்சயமாகவே, ஒரு பாப்டிஸ்டு சபையில் நான் செய்த என்னுடைய ஊழியத்தின் வாலிப நாட்களில், வளர்க்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டு, பாப்டிஸ்டு சபையின்படி, நீங்கள் விசுவாசிக்கும்போதே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று போதித்து வந்தேன்... ஆனால் வேதாகமத்தின்படி, நீங்கள் விசுவாசித்த பிறகு, நீங்கள் விசுவாசித்த பிறகு தான் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் மட்டுமாக, தேவன் ஒருபோதும் உங்கள் விசுவாசத்தை அடையாளம் கண்டுகொள்ளவேயில்லை. அது சரியே. சுகமளித்தல் மற்றும் இரட்சிப்பைக் குறித்து, விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாம், தேவனை விசுவாசித்தான். சுகமளித்தல் மூலமாக, இரட்சிப்பு கொண்டுவரப்பட்டது, ஏனென்றால் அது ஈசாக்கைக் கொண்டு வந்தது, ஈசாக்கின் மூலமாக இரட்சிப்பு வந்தது. 34. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் என்பதை இப்பொழுது கவனியுங்கள். அது சரிதானா? அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது, தேவன் அவனுடைய விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதற்கான ஒரு அடையாளத்தை அவர் அவனுக்குக் கொடுத்தார். ஆமென். உங்களுக்குப் புரிகிறதா? கவனியுங்கள். பாருங்கள். ஆபிரகாம், "ஆண்டவரே, நான் உம்மை விசுவாசிக்கிறேன்" என்றான். எந்த சத்தமும் திரும்ப வரவில்லை. எனக்குத் தெரியவில்லை. நல்லது, அவன், "ஆண்டவரே, நான் உம்மை விசுவாசிக்கிறேன்" என்றான். எந்த சத்தமும் திரும்ப வராத போது, ஆபிரகாமுக்குத் தெரியாதிருந்தது. ஆனால் தேவன் திரும்ப பேசி அவர் அவனுடைய விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதற்கான ஒரு அடையாளத்தை ஆபிரகாமுக்குக் கொடுத்தார். அவர் அவனுக்கு விருத்தசேதனத்தை ஒரு அடையாளமாகக் கொடுத்தார். அது சரிதானா? வேறு வார்த்தைகளில் கூறினால், அது ஆபிரகாமுடைய விசுவாசத்தின் ஒரு உறுதிப்படுத்தலாக இருந்தது. அதன்பிறகு அவன் அந்த உறுதிப்படுத்தலைப் பெற்றபோது, அவன், "தேவனுக்கு துதி உண்டாவதாக, அது முடிந்து விட்டது. எனக்கு விசுவாசம் உள்ளது, தேவன் அதை அடையாளம் கண்டுகொண்டார்" என்று கூறினான். நீங்கள், "நான் விசுவாசத்தைப் பெற்றிருக்கிறேன்" என்று கூறும் போது, தேவன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை உங்களுக்குக் கொடுக்கிறார், அது தேவன் உங்கள் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதற்கான ஒரு உறுதிப்பாடாக இருக்கிறது. ஆமென். நல்லது, நீங்கள், "பரிசுத்த ஆவி தான் விருத்தசேதனமா?" என்று கேட்கலாம். ஆம், ஐயா. ஆமென். அது சரியே. பரிசுத்த ஆவி தான் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையாக இருக்கிறது. உங்கள் விசுவாசத்திற்கு தேவனால் கொடுக்கப்பட்ட அங்கீகாரத்திற்கான முத்திரையாக இருக்கிறது. "நீங்கள் மீட்கப்படும் நாளுகென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்" என்று எபேசியர் 4:30 கூறுகிறது. அல்லேலூயா. இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலுக்கான விசுவாசத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்று நீங்கள் கூறி, ஏதோவொன்று உங்களை தட்டி, "வெளியே போ" என்று கூறும்போது. அது தெய்வீக சுகமளித்தலுக்கான உங்கள் விசுவாசத்தை தேவன் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதற்கான உறுதிப்பாடாக உள்ளது. அது சரியே. நீங்கள் உங்கள் விசுவாசத்தை செயலில் வைக்க தைரியத்தைப் பெற்றுக்கொள்ளும்போது. ஆனால் நீங்கள் விசுவாசத்தைப் பெற்றிருப்பதாகக் கூறியும், அதைக் கட்டவிழ்த்துவிட பயப்படும் போது, உங்கள் விசுவாசம் செத்துவிடுகிறது. புரிகிறதா? ஆனால் நீங்கள் விசுவாசத்தைப் பெற்றிருந்து, அதைக் கட்டவிழ்த்துவிட விருப்பமுள்ளவர்களாக இருக்கும் போது, தேவன் அதைத் தொடர்ந்து வரும் அடையாளங்களைக் கொண்டு அதை உறுதிப்படுத்துகிறார், அப்பொழுது நீங்கள் உங்கள் சுகமளித்தலைக் காண்பீர்கள். நீங்கள் விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ளும்போது... 35. இப்பொழுது, இந்தக் கூட்டங்களும் ஜனங்கள் கூடிவருவதும், அதற்காகத்தான்; அது விசுவாசத்தை ஊக்குவித்து (தூண்டுவதற்கும்), விசுவாசத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவரவும் தான். நம்மால் சுகமளிக்க முடியாது. நிச்சயமாக முடியாது. ஆனால் அதைச் செய்வதில் ஒரு பாகத்தை உடையவர்களாயிருக்கிறோம். அது சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுவதாக இருக்கிறது; அதைச் செய்வதற்கான ஒரு பாகம் அதுதான். வேறொரு பாகம் என்னவென்றால், அந்நிய பாஷைகளில் பேசுவதாக இருக்கிறது. அது வெளிப்பாட்டின் மூலமாக இருக்குமானால், அது பாகத்திலுள்ள ஒன்று தான். ஒரு-ஒரு தீர்க்கதரிசின வரம், அது அதில் வேறொரு பாகமாக இருக்கிறது. அதன்பிறகு அடையாளங்களும் அற்புதங்களும் இருக்கின்றன, எல்லாமே வரங்களாகவும், எல்லாமே சபையை ஊக்குவிக்கும்படியாகவும், சபையை ஒன்றாக வைத்துக் கொள்ளவும் சபையில் இருக்கின்றன. இயேசு மறுபடியுமாக மகிமையில் திரும்பி வருவது மட்டுமாக, இயேசுவுடைய ஜீவனின் ஒவ்வொரு விசேஷ குணத்திற்காகவும் (attribute) இருக்கின்றன. ஆமென். இப்பொழுது, உங்கள் சத்துரு பிசாசாக இருக்கிறான். தேவன் ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு வழியிலும், ஜனங்களை சுகமடைந்தவர்களாக வைக்கும்படி எப்போதுமே முயற்சித்து வந்திருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? தேவன் சுகமளித்தலுக்கான ஒரு அருளப்பட்ட வழி இல்லாமல் அவர் ஒருபோதும் எந்த நேரத்திலுமே ஜனங்களை விட்டுவிடவேயில்லை. அவர் எப்போது அதைச் செய்தார் என்பதை, நீங்கள் வேதவாக்கியங்களில் மேற்கோள் காட்டலாம். ஜனங்கள் எவ்வளவு மறந்து போயிருந்தாலும், ஜனங்கள் எவ்வளவு வெகு தூரமாக அகன்று போயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, தேவன் சுகமளித்தலுக்கான ஒரு அருளப்பட்ட வழியை உடையவராகவே இருந்தார். அவர் எப்போதுமே அதைக் கொண்டிருந்தார். அதை விசுவாசித்த யாரோ ஒருவரை கூடவே அவர் கொண்டிருக்கத்தான் செய்தார். நீண்ட காலத்திற்கு முன்பு, ஆரம்ப காலங்களைப் பாருங்கள், அவர் ஒரு அருளப்பட்ட வழியை உடையவராகவே இருந்தார். அப்போது அவர் ஒரு வெண்கல சர்ப்பத்தைக் கொண்டிருந்தார்; அதுவே, சரிநேராக திரும்பி, எகிப்து தேசத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த, இஸ்ரவேல் புத்திரர்களுக்கு தேவனால் அருளப்பட்ட வழியாக இருந்தது. அவர்கள் அணிவகுத்து வரத் தொடங்கின போதே, அங்கே வியாதி இருக்கும் என்பதை அறிந்திருந்தார், எனவே அவர் அப்படியே ஒரு - சொன்னார், நல்லது - அவர் ஒரு வழியை அருளினார். 36. நான் இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, இங்கு ஏதோவொரு இடத்தில், மோசே ஒரு மருத்துவராயிருந்தான் என்றும், அவன் வைத்தியனாகிய மோசேயாக இருந்தான் என்றும் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா, இல்லையா என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவன் ஒரு வைத்தியனாக (doctor) இருந்தான். "எகிப்தியரின் சகல ஞானத்திலும் அவன் கற்பிக்கப்பட்டிருந்தான்" என்று வேதாகமம் கூறுகிறது. அது சரிதானா? இந்நிலையில் அவர்களோ மருத்துவர்களை குறித்து தற்பெருமையாக வீம்புபேச்சுபேசிக் கொண்டிருந்தார்கள். ஓ, என்னே, எனவே, மருத்துவராகிய மோசே... இங்கே சிகாகோவில் ஏராளமான மருத்துவ விஞ்ஞானம் இருப்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன், மோசே எவ்வாறு 20 இலட்சம் ஜனங்களை நாற்பது வருடங்களாக ஆரோக்கியமானவர்களாகவும், வலிமை வாய்ந்தவர்களாகவும் பாதுகாப்பாக வைத்திருந்தான் என்பதை அறிய விரும்புகிறேன், அவர்கள் அந்த வனாந்தரத்தை விட்டு வெளியே அணிவகுத்து வந்த போது, அவர்கள் மத்தியில் பலவீனமான ஒருவரும் இல்லாதிருந்தார்கள். அது அற்புதமாக இல்லையா? அவனிடம் இருந்த அந்த நோய்தீர்க்கும் மருந்துகளில் சிலதை நான் கொண்டிருக்க விரும்பியிருப்பேன், நீங்களும் விரும்பியிருக்க மாட்டீர்களா? அவன் அங்கே பின்னால் கட்டி-புண் முதலியவற்றிற்கு மெல்லிய துணியின் மேல் வைத்துக்கட்டும் எத்தனை அத்திப்பழ அடை பற்றுகளையும் மற்றும் காரியங்களையும் உபயோகித்தானோ என்று வியப்படைகிறேன்? அவன் ... பின்னால் எத்தனை பச்சிலைகளையும் மற்றும் பென்சிலின் தடுப்பூசிகளையும் கொண்டிருந்தான் (பாருங்கள்?) மருத்துவராகிய மோசே, அவன் எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்த 20 இலட்சம் ஜனங்களைக் கொண்டிருந்தான், கிட்டத்தட்ட அவ்வளவு எண்ணிக்கையில் இருந்த அவர்களை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்து, அவர்களை பாலஸ்தீனத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே, ஒரு இரவில் எத்தனை குழந்தைகள் பிறந்திருப்பார்கள்? டாக்டர் மோசே போய்ப்பார்க்க வேண்டியிருந்தது. எவ்வளவு ஜனங்களுக்கு வயிற்று வலி இருந்திருக்கும், அவர்கள் நாள் முழுவதும் பாதை நெடுகிலும் தங்களால் கண்டுபிடிக்க முடிந்ததை தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்? ஒவ்வொரு இரவிலும் மருத்துவத்திற்காக எத்தனை பேர் மருத்துவர் மோசேயை அழைத்திருப்பார்கள்? நீங்கள் எப்பொழுதாவது அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு ஜனங்கள் அந்தப் பாறைகளின் மேலும் மற்றும் காரியங்களின் மேலும் விழுந்து, தங்கள் கால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கும், மேலும் ஒருக்கால், ஒவ்வொரு நாளும் காலையோ அல்லது ஏதோவொன்றையோ, அல்லது அதைப்போன்ற வேறு (எதையோ) உடைத்துக்கொண்டிருந்திருப்பார்கள்? அவர்கள் முறுமுறுத்துக் கொண்டும், பின்வாங்கிக்கொண்டும், மற்ற எல்லாமாகவும் இருந்த காரணத்தினால், அவர்கள் தொல்லையில் சிக்கிக் கொண்டார்கள். மேலும் மருத்துவர் மோசே... 37. அவனுடைய மருந்துப் பெட்டியை நோக்கி, அவனிடம் என்னவெல்லாம் இருந்தன என்று பார்க்க நீங்கள் விரும்பியிருக்க மாட்டீர்களா? வேதாகமம் அதைக் கொடுக்கிறது. மோசே தன்னோடு வைத்திருந்த ஒவ்வொரு துணுக்கு மருந்தையும் வேதாகமம் கொடுக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு அது தெரியுமா? சற்றுநேரத்தில், நான் அதை உங்களுக்குக் காண்பிப்பேன். இப்பொழுது, இதோ அவனுடைய மருந்து பெட்டியில் பார்வையிட்டு, இப்பொழுது மோசேயிடம் என்னவிருந்தது என்பதைக் காணப் போகிறோம். யாத்திராகமம், சரி. நாம் பார்ப்போம், இதோ அது இருக்கிறது. இது திறந்திருக்கிறது. "உன்னைச் சுகப்படுத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." அவனிடம் இருந்த ஒவ்வொரு மருந்துச்சீட்டும் அதுதான். எனவே ஒரு குழந்தை பிறக்கப் போகிறது, தாய் தொல்லையில் இருக்கிறாள் என்று யாராவது கூறும்போது, "உன்னைச் சுகப்படுத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." ஏதோவொன்று சம்பவித்து ஒரு மனிதன் அவர்களிடம் இருந்து, அவனுடைய கண்களில் ஒன்று வெளியே தள்ளிவிட்டிருந்தால், "உன்னைச் சுகப்படுத்துகிற, உன் தேவனாகிய கர்த்தர் நானே." ஒரு மனிதன் விழுந்து, தன்னுடைய காலை உடைத்துக்கொண்ட போதும், "உன்னைச் சுகப்படுத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." பிள்ளைகளில் ஒன்றுக்கு மார்சளிக் காய்ச்சல் (pneumonia) இருந்திருந்தாலும், "உன்னைச் சுகப்படுத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." "டாக்டர் மோசே அவர்களே, இன்றிரவு அந்தப் பட்டியலில் நீர் என்ன வைத்திருக்கிறீர்? இன்றிரவு வழியில் என்ன இருக்கிறது? இன்றிரவு சலுகை உரிமைச் சீட்டில் (charter) என்ன இருக்கிறது? எங்களிடம் இங்கே வியாதிப்பட்ட குழந்தை இருக்கிறது." மோசேயோ, "உன்னைச் சுகப்படுத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" என்று சொன்னான். "டாக்டர் மோசே அவர்களே, உமக்கு நன்றி, நாங்கள் போய் அதை பயன்படுத்திக்கொள்கிறோம். கர்த்தாவே, இந்தக் குழந்தையைச் சுகப்படுத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நீர் என்று நீர் சொல்லியிருக்கிறீரே, கர்த்தாவே. ஆமென். நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம், கர்த்தாவே." அடுத்த நாள் காலையில், குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும். அது போதுமானதாக இருந்தது. "உன்னைச் சுகப்படுத்துகிற கர்த்தர் நானே." மோசேயிடம் இருந்த ஒரே மருந்துக் குறிப்பு (prescription) அதுதான், 20 இலட்சம் ஜனங்கள் அந்த வனாந்தரத்தினூடாக நாற்பது வருடங்களாக கொண்டு வரப்பட்டும், அவர்களோடு அந்த வனாந்தரத்தை விட்டு வெளியே வந்தவர்களில், பலவீனமாகவோ, முடமாகவோ, அல்லது குருடாகவோ இருந்த ஒருவரும் அங்கே இல்லாதிருந்தார்கள். அல்லேலூயா. மன்னித்துக்கொள்ளுங்கள், அது-அது திடீரென்று செயல்படுவதை நிறுத்த வேண்டியிருந்தது. அது ஏறக்குறைய அரை மணிநேரமாக அங்கே கட்டுப்படுத்திவைக்கப்பட்டிருந்தது. சரி. 38. "உன்னைச் சுகமாக்குகிற கர்த்தர் நானே." அவர்களுக்குத் தெரிந்த ஒரே மருந்துக் குறிப்பு (prescription) அதுதான். அது மிக நன்றாக வேலை செய்தது. நாற்பது வருடங்களாக இருபது இலட்சம் ஜனங்களை சுகமாக வைக்கும் ஒரு மருத்துவரை இன்று எனக்குக் கொடுங்கள் பார்க்கலாம், அவன் நிச்சயமாகவே கொஞ்சம் தொழிலை கொண்டிருந்து, தனக்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்திக்கொள்வான். நல்லது, நான் உங்களுக்குக் கூறுகிறேன், மோசே உபயோகித்த அதே மருந்துக்குறிப்பு இன்று உலகத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் திறந்தேயிருக்கிறது. ஆமென். "விருப்பமுள்ளவன் வந்து, நீரூற் - தண்ணீரிலிருந்து, ஜீவத்தண்ணீரிலிருந்து இலவசமாய்ப் பருகக்கடவன். விருப்பமுள்ளவன் வரக்கடவன்." ஆமென். 39. இப்பொழுது, நாம் அங்கே தான் பரிச்சயம் உள்ளவர்களாக இருக்கும்படி வந்திருக்கிறோம். நான் இப்பொழுது பக்திபரவசப்படுகிறேன். என்னே. அதுதான் மருந்துக் குறிப்பாக உள்ளது. நாம் இன்று உலகத்திற்கு அறிமுகப்படுத்த முயற்சிக்கும் ஒன்று அதுவாகத்தான் இருக்கிறது. உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால், "உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால், என்னால் முடியும்" என்று இயேசு சொல்லியிருக்கிறார். "ஆண்டவரே, என்மேல் மனமிரங்கும்" என்று அந்தக் குருடன் சொன்னான். "என்னால் இதைச் செய்ய முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா?" "ஆம், ஆண்டவரே, நாங்கள் விசுவாசிக்கிறோம்." "என்னால் முடியும் என்று நீ விசுவாசித்தால், என்னால் கூடும்." அவர் அவனுடைய கண்களைத் தொட்டார். அதைத்தான் அவர்கள் விரும்பினார்கள். அவருடைய கரங்கள் வைக்கப்பட்டு, "இப்பொழுது, உன்னுடைய விசுவாசத்தின்படி, உனக்கு ஆகக்கடவது" என்றார். அவர்களிடம் இருந்ததாக அவர்கள் சொன்னதையே அவர்கள் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவர்கள் தேவனை மகிமைப்படுத்தினார்கள். அங்கே தான் அது இருந்தது. 40. ஒருநாள், அவர் ஒரு வீட்டில் இருந்து போதித்துக் கொண்டிருந்தார். முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, பொருட்கள் தரையைச் சுற்றிலும் விழத் தொடங்கினது. அவர் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்துபார்க்க முடிகிறது. "அங்கே மேலே ஏறுவது யார் என்று வியப்பாக உள்ளதே." ஒருசில நிமிடங்களில், வேறு ஏதோ விழத் தொடங்கினது, அவர்கள் அந்த வீட்டின் கூரையைப் பிரித்து அகற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏதோவொரு மனிதனை அங்கே கொண்டிருந்தார்கள்; அவனை ஆண்டவருக்கு முன்பாக வரச் செய்யும்படி, அவர்கள் அவனைக் கொண்டுவரப் போவதாக இருந்தார்கள். மேலும் இப்பொழுது, வருகிற இந்த மனிதனுக்கு மிக அதிக விசுவாசம் இல்லாதிருந்தது. இந்நிலையில் அவர்கள் அவனைக் கீழே இறக்கினார்கள். இயேசு அந்த மனிதனைப் பார்த்து, அவன் பாவம் செய்து தவறானதை நடப்பித்திருந்தான் என்று அறிந்து கொண்டார். ஆனால் அவர்களுடைய விசுவாசத்தை உணர்ந்து, அவர்களுடைய விசுவாசத்தை அவர் நம்பினார். அல்லேலூயா. அவர் அந்த மனிதனை நோக்கிப் பார்த்து, அவனுடைய இருதயத்தின் நினைவுகளை அறிந்து கொண்டு, "உன்னுடைய பாவங்கள் இப்பொழுது உனக்கு மன்னிக்கப்பட்டன. எழுந்து போ" என்று கூறினார். அல்லேலூயா. இன்று சிகாகோவிலும், மற்ற எல்லாவிடங்களிலும் அந்தக் காரியம் தான் நமக்கு அவசியமாயிருக்கிறது, ஜீவனை உடைய அவருடைய வார்த்தையைப் பேசுவதன் மூலமாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையைக் குறித்த ஒரு வெளிப்பாடு தான் இன்று நமக்குத் தேவையாக இருக்கிறது. ஒருநாள் இயேசு அந்த மரத்தின் பக்கமாக வந்து கொண்டிருந்த போது, அந்த மரத்தை அண்ணாந்து பார்த்து, "உன்னிடத்தில் எந்த கனியும் விளையாது. இது முதற்கொண்டு ஒருவனும் உன்னிடத்திலிருந்து (கனியைப்) புசிக்க மாட்டான்" என்று கூறிவிட்டுப் தொடர்ந்து போய்விட்டார்கள், எதுவுமே நடக்கவில்லை. அடுத்த நாள், ஏறக்குறைய பதினொரு மணியளவில் அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அங்கே அந்த ஆலயத்திலிருந்து அவர்களை துரத்தியடித்திருந்தார்கள், பரிசேயர்களும் சதுசேயர்களும் அவரை பரிகசித்துக்கொண்டும், கேலி செய்துகொண்டும் இருந்தார்கள். அவரோ தொடர்ந்து கடந்து சென்று விட்டார், மேலும் பேதுரு எப்போதுமே அவருடனே கூட நடந்து கொண்டிருந்தான் என்பது உங்களுக்குத் தெரியும், அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் அங்கே நோக்கிப் பார்த்தபோது, அந்த மரம் உலர்ந்து வாடத் தொடங்கியிருந்தது. அவன், "ஆண்டவரே, அதோ பாரும், நீர் நேற்று சபித்த அந்த மரம் ஏற்கனவே வாடிப்போய் விட்டது" என்றான். இயேசு திரும்பிப்பார்த்து, "தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவர்களாயிருங்கள். எதற்காகவும்... நீங்கள் வாஞ்சிக்கும் எல்லாமும், நீங்கள் ஜெபிக்கும்போது, அதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்கள் அதைக் கொண்டிருப்பீர்கள்" என்றார். அது சரிதானா? "நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அதைப் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று விசுவாசியுங்கள்." 41. இப்பொழுது, அந்த மரத்துக்கு என்ன சம்பவித்தது? இயேசு... ஒரு மரத்திற்கு ஜீவ இளங்கருமுளை (germ of life) உண்டென்று எத்தனை பேருக்குத் தெரியும்? எல்லாருக்கும் தெரியும். அதற்கு அது இல்லை என்றால், அது ஜீவனோடு இராது. இப்பொழுது, அங்கே... இப்பொழுது கவனியுங்கள், அந்த மரம் எங்கிருந்து மரித்தது? வேர்களிலிருந்து. அது வேர்களிலிருந்தே பட்டுப்போயிற்று. இப்பொழுது, அந்த வேரில் தான் அந்த மரத்தின் ஜீவன் இருந்தது. இயேசு அந்த இலைகளைப் பார்த்தோ, கிளைகளைப் பார்த்தோ பேசியிருக்கவில்லை. அவர் ஒருபோதும் அந்த வேர்களைப் பார்த்தோ பேசியிருக்கவில்லை, ஆனால் அவர் அந்த ஜீவனிடம் பேசினார். அந்த ஜீவன் அந்த மரத்தை விட்டுப் போய்விட்டது. அந்த மரம் அங்கே ஜீவன் இல்லாமல் நின்று கொண்டிருந்தது. அது வாடிப்போய்க் கொண்டிருந்தது. அது சரிதானா? இப்பொழுது, அது அந்த மரமாக இருந்ததைக் காட்டிலும், ஒரு புற்றுநோயைப் பார்த்தோ, ஒரு கட்டியைப் பார்த்தோ, கண்புரை நோயைப் பார்த்தோ, மற்ற எந்த நோய் நுண்மங்களைப் பார்த்தோ, மற்ற எந்த ஜீவனைப் பார்த்தோ பேசுவது எந்தவிதத்திலாவது கடினமாக இருந்திருக்குமா? அது சரிதானா? அவர், "இனிமேல் ஒருவனும் உன்னிடமிருந்து புசிக்க மாட்டான்" என்றார். அந்த மரம் அடுத்த நாளே வாடத் தொடங்கிவிட்டது. அதில் எந்த ஜீவனும் இல்லாதிருந்தது. அவர், "இனிமேலும் இந்த மனிதனை தொந்திரவு செய்யாதே" என்று கூறியிருந்தால். அவர், "நீங்கள் சொல்லும்போது," என்றார், நான் கூறும்போது என்றல்ல, நான் என்ன கூறுகிறேன் என்பது அல்ல, நீங்கள் என்ன கூறுகிறீர்களோ அது... அது சம்பவிக்கும் என்று விசுவாசியுங்கள், அப்போது ஜீவன் அதை விட்டுப்போய்விடும். 42. ஒரு புற்று நோய் என்பது என்ன? ஒரு - என்பது என்ன? ஒரு வியாதி என்பது என்ன? இப்பொழுது அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு நாம் அதன்பேரில் இடைபடலாம். ஒரு புற்று நோய் என்பது என்ன? அந்தக் காரியத்திற்கு என்ன காரணம்? நாம் ஒரு புற்றுநோயை எடுத்துக்கொள்வோம், அல்லது உங்களுக்கு விருப்பமான எதையும் எடுத்துக்கொள்வோம்: காசநோய், நிமோனியா, நீங்கள் விரும்பும் எந்த வியாதியாக இருந்தாலும், அதை எடுத்துக்கொள்வோம். வியாதிகள் ஜீவ அணுக்களாக உள்ளன. நம்முடைய நேரம் போய்க் கொண்டிருக்கையில், இதோ துரிதமாக, ஒரு காரியத்தை நான் கூறட்டும். கவனியுங்கள், கடைசி நாட்களில், அவர்கள் (வைரஸ்) கிருமிகளைக்கொண்டு போர்தொடுப்பார்கள் (germ warfare) என்று வேதாகமம் முன்னுரைக்கிறது என்பதை அறிவீர்களா? அந்த வியாதிகள் ஜனங்கள் மேல் வெடித்து கிளம்பி, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இல்லாத எல்லார் மேலும் விழும் என்பது தெரியுமா? ஆனால் அந்த தூதனிடம் அல்லது இந்தக் கொள்ளை நோய்களின் மேல் உத்தரவைக் கொண்டிருந்த தூதனிடம், முத்திரை தரித்திருந்த யாதொருவனையும் தொடக்கூடாது என்ற கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏன், சகோதரர்களே, சபையானது அந்த நிலையில் இருக்கும்படி, அதைக் கொண்டுவரும்படி, அம்மாதிரியான போதகர்களை நாம் எவ்வளவாக கொண்டிருந்தாக வேண்டும்? நோய் தடுப்பாற்றல் (Immune - நோய் எதிர்ப்பு சக்தி). மஞ்சள் காய்ச்சல் (கடுமையான தொற்று வியாதி - தமிழாக்கியோன்) மற்றும் அதைப் போன்றவைகளிலிருந்து பாதுகாக்க முயற்சித்து, மருத்துவர்கள் என்னுடைய கைகளில் ஊசிகளை குத்தின இடம் இப்பொழுதும் புண்ணாக உள்ளது. எனக்கு அது தேவையில்லை என்று அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை. ஆனால் தேவன் என்ன செய்யப் போகிறார் என்று நான் உங்களுக்குக் கூறுவேன். தேவனிடம் ஒரு நிணநீர் (serum) உள்ளது, அது பரிசுத்த ஆவி என்று அழைக்கப்படும். அந்த நிணநீர் உள்ளே செல்லும்போது, அதுதான் உங்களை அதிலிருந்து பாதுகாக்கும். அல்லேலூயா. கடைசி நாட்களில்... 43. 1937-ம் ஆண்டில் வெள்ளப்பெருக்கின் போது, ஒரு சமயம் நடந்த காரியம் எனது நினைவுக்கு வருகிறது; எல்லாருமே டைபாய்டு ஊசிகளைப் போட்டிருந்தார்கள். இந்நிலையில், நானோ அதிலிருந்து தப்பித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் மின்சார கம்பி முதலியவற்றைப் பழுது பார்த்துப் பேண வேண்டிய பொறுப்புடைய (lineman) ஒருவனாக இருந்தேன், எனவே நான் வெளியேறி, போய்விட்டேன். யாரோ ஒரு மனிதர் மேலே நடந்து வந்து, "நீர் இன்னும் உம்முடைய ஊசிகளைப் போட்டுக்கொள்ளவில்லையா?" என்று கேட்டார். அதற்கு நான், "ஓ, ஆமாம். எனக்கு ஊசிபோடப்பட்டு விட்டது" என்று கூறினேன். அவர், "நீர் ஊசி போட்டுவிட்டீர். அது உம்மை நோய்வாய்ப்படுத்தியதா?" என்று கேட்டார். நான், "ஓ, இல்லை. இல்லை, நிச்சயமாக அது நோய்வாய்ப்படுத்தவில்லை" என்று கூறினேன். அவர், "நீர் எப்போது ஊசி போட்டுக்கொண்டீர்?" என்று கேட்டார். நான், "ஓ, ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்பு" என்றேன். "மூன்று வருடங்களா? நல்லது, நீர் வேறொரு ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்" என்றார். நான், "ஏறக்குறைய ஒவ்வொரு மணிநேரமும் நான் ஒன்றைப் போட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்" என்றேன். சகோதரனே, நான்... சரி. நான் அப்படியே தொடர்ந்து அவரிடம் பேசிக் கொண்டேயிருந்தேன். 44. ஆனால் பார், நண்பனே, அங்கே ஒரு சபை எழும்பும் அந்த நேரம் வருகிறது. நமக்கு தெய்வீக சுகமளித்தலுக்கே விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியாவிட்டால், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசத்தை நாம் எவ்வாறு கொண்டிருக்கப் போகிறோம்? நண்பனே, நாம் வெளியே போயாக வேண்டும். நாம் இருக்கிற இந்தப் பழைய, மந்தமான சபையின் நிலையை விட்டு வெளியே வந்தாக வேண்டும். நாம் இதிலிருந்து விலகிச் சென்று, நாம் செய்து கொண்டிருக்கும் காரியங்களிலிருந்து மிகவும் வித்தியாசமான ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குவோம் (Launch out). கரையோடு இணைக்கும் கயிறுகளை (shorelines) வெட்டி எறிந்து விட்டு, பயம் மற்றும் சந்தேகத்தின் உணர்வுகள் எல்லாவற்றையும் இழந்து, யாவும் கைகூடும் ஏதோவொரு இடத்திற்குள் வெளியே வந்துவிடுவோம், அங்கே வெளியே உங்களால் எவ்வளவு கட்டற்றவிதமாக விடுதலையோடு இருக்க முடியுமோ அவ்வளவு விடுதலையாக வந்துவிடுவோம், சகோதரனே. நீங்கள் உங்கள் கப்பற்பாயை (sail) பரலோகத்தை நோக்கி பொருத்தி விட்டீர்கள், எதுவுமே உங்களை எந்தவிதத்திலும் கலக்கவே முடியாது. நீங்கள் அந்த வழியாகப் போய்விட்டீர்கள்; அவ்வளவு தான். எதுவுமே உங்களுக்கு தீங்குசெய்ய முடியாது. இப்பொழுது, வேதாகமத்தின்படி, இந்நாட்களில் ஒன்றில், அது அந்தவிதமான சபையாகத்தான் இருக்கப் போகிறது. (வேதாகமத்தில்) அங்கே அந்தத் தூதன் அவருடைய கோபாக்கினையை ஊற்றி, வியாதிகள் வெடித்துக்கிளம்பின போது, மனிதர்கள் தாங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திலேயே அவர்களுடைய மாமிசமும் (flesh - சதை, உடம்பு, தசை - தமிழாக்கியோன்) கூட அழுகிப்போய்விடும். ஆகாயத்துப் பறவைகள் இறங்கிவந்து, தலைமை படைத்தலைவர்கள் (chief-captains - தலைமை அதிகாரிகள், தலைமைப்பணியாளர்கள், தலைமை படைப்பிரிவுத் தளபதிகள், தலைமை கடற்படைத்தளபதிகள், தலைமை இராணுவத் தலைவர்கள், தலைமை கப்பற்குழு முதல்வர்கள்), மற்றும் மகத்தான மனிதர்கள், ஜனாதிபதிகள் (presidents - குடியரசுத்தலைவர்கள், கூட்டத்தலைவர்கள், மன்றத்தலைவர்கள், அவைத்தலைவர்கள், தலைமை அதிகாரிகள், அரசுத்தலைவர்கள், தலைவர்கள்), யுத்தவீரர்கள் (warriors - மாவீரர்கள், போர்வீரர்கள், படைவீரர்கள்), இராஜதூதர்கள், (diplomats - ராஜ்யப்பிரதிநிதிகள், அரசு தூதர்கள்), ஆட்சியாளர் (potentates - வல்லுநர்கள், ஆட்சி செய்பவர்கள், ஆளுநர்கள், அதிபதிகள், ராஜாக்கள்), மற்றும் எல்லாருடைய புயங்களையும் (shoulders - தோள், தோட்பட்டை, தோட்பட்டை இறைச்சி, தோட்கட்டு, புஜம்), படிப்படியாக தின்று அழிக்கும் (eat off), மேலும் அவர்களுடைய மாமிசத்தையும் தின்னும். தின்னும்... ஆனால், "தங்கள் நெற்றியில் தேவனுடைய முத்திரையைப் பெற்றிருக்கிற யாருடைய அருகிலும் வராதே" என்று அந்த தூதனுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது. அது ஒரு... இருக்கப் போகிறது. இந்நாட்களில் ஒன்றில், தெய்வீக சுகமளித்தலானது ஜனங்கள் மத்தியில் ஒரு மகத்தான காரியமாக இருக்கப் போகிறது. எனவே நாம் நிபந்தனைக்குள் வந்துவிடுவோம். நாம்... என்று தேவன் விரும்புகிறார். நீங்கள், "நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள், "நாம்" என்று கூறுகிறீர்களே" என்று சொல்லலாம். அதன்பேரில் தான் தேவன் காத்துக் கொண்டிருக்கிறார். தேவன்... நாம் இயேசு திரும்பி வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம், இயேசுவோ நம்பேரில் காத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள், "நல்லது, எவ்வாறு, அதைக் குறித்து நம்மால் என்னதான் செய்ய முடியும்?" என்று கேட்கலாம். வேளை வந்தது என்றும், அவருடைய மணவாட்டி தன்னை ஆயத்தம் செய்து விட்டாள் என்றும் (அல்லேலூயா.), அவள் தன்னை ஆயத்தம் செய்து விட்டாள் என்றும் வேதாகமம் கூறுகிறது. 45. வியாதிகள், புற்றுநோய், வளர்ச்சிகள், அவைகள் என்னவாக உள்ளன? உதாரணமாக, நாம் இதை எடுத்துக்கொள்வோம், இங்கே ஒரு வாலிப பெண் நிற்கிறாள், அவள் மிகச்சிறந்த ஆரோக்கியத்தோடு நின்று கொண்டிருக்கிறாள், அவள் பலமுள்ளவளாகவும், ஆரோக்கியமாகவும் தோற்றமளிக்கிறாள். ஒருக்கால், ஒருசில வாரங்களில், அவளுடைய ஆரோக்கியம் குறைவுபடுவதை நாம் கவனிக்கத் தொடங்கலாம். நல்லது, ஏனென்று அவர்கள் வியப்படைகிறார்கள். ஒருக்கால் அவர்கள்-அவர்கள் ஒரு மருத்துவரிடம் போவார்கள். அவர்கள் - ஒரு மருத்துவர் அவளைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "நல்லது" என்கிறார். முதலாவது காரியம் நீங்கள் அவளுடைய இரத்தத்தையோ அல்லது ஏதோவொன்றையோ அல்லது வேறொன்றையோ பரிசோதித்துப் பார்க்க வேண்டும், அல்லது அவளை ஒரு பரிசோதனைக்கு உட்படுத்தி அங்கே ஒரு புற்றுநோய் உள்ளதைக் கண்டுபிடிக்கிறீர்கள். இப்பொழுது, பதினெட்டு அல்லது இருபது வருடங்களாக அவள் பூரண ஆரோக்கியத்தோடு தான் இருந்தாள். ஆனால் அவளுக்குள் வேறொரு வளர்ச்சி வருகிறது. ஒரு-ஒரு வளர்ச்சி... முன்பாக. அது வளர்ந்து கொண்டிருக்குமானால், அது ஒரு ஜீவனாக இருக்கிறது. இப்பொழுது, இங்கேதான் அந்த வியாதிகள் இருக்கின்றன. கூர்ந்து கவனியுங்கள், அவைகளில் சில சரீர வடிவங்களை எடுத்துக்கொள்ளாது, சில வேறுவிதத்தில் வளருகின்றன. அங்கே அதைக் குறித்து ஒரு பிசாசு இருப்பதைப் போன்று, அங்கே, காக்கை வலிப்பில் ஒன்று, மற்றும் அங்கே வித்தியாசமானவைகள் இருக்கின்றன. அவைகளில் சில சரீரபிரகாரமான வடிவங்களை எடுத்துக்கொள்கின்றன. 46. இப்பொழுது கவனியுங்கள், நீங்கள் ஒன்றுமே இல்லாத அல்லது நீங்கள் எங்கேயும் இல்லாதிருந்த ஒரு நேரம் அங்கே இருந்தது, ஆனால் நீங்கள் ஏதோவொன்றாக அல்லது ஏதோவொரு இடத்தில் இருப்பதைத் தவிர (வேறு எதுவாகவும்) இருக்கும் ஒரு நேரம் அங்கே ஒருபோதும் இருப்பதில்லை. இப்பொழுது, நீங்கள் இதைக் கவனிப்பீர்களானால், சற்று பொறுங்கள். இப்பொழுது, நீங்கள் முதலில் இந்த உலகத்திற்குள் துவங்கினபோது, நீங்கள் ஏறக்குறைய ... அந்த அளவில் தான் இருந்தீர்கள். நல்லது, ஒரு மனிதனுடைய கண்ணால் காணக்கூடிய எதையும் காட்டிலும் நீங்கள் சிறியதாக இருந்தீர்கள். அது அந்த ஆணிடமிருந்து, தகப்பனிடமிருந்து வருகிற ஒரு ஜீவ அணுவாக இருந்தது. தாய் அடைகாக்கும் கருவியாக இருக்கிறாள். அங்கே உள்ளே இந்தச் சிறிய ஜீவ அணு வருகிறது. பிறகு, முதலாவது காரியம் சம்பவிக்கிறது, அந்தச் சிறிய ஜீவ அணுவானது கர்ப்பப்பையில் தன்னுடைய இடத்தை எடுத்துக்கொண்ட பிறகு, இந்தச் சின்னஞ்சிறிய உயிரணுவில் ஒரு உயிரணுவானது வளர்ந்து (swelled), அது ஒரு சிறிய இடத்தை தோன்றச்செய்கிறது, அது ஒரு நூலில் உள்ள ஒரு சிறிய வீங்கின இடத்தைப் போன்று இருக்கும். ஜீவ அணுவானது, நான் அதை மருத்துவர்களாகிய நண்பர்கள் மூலமாக, கண்ணாடிகள் வழியாகக் கவனித்திருக்கிறேன், அது ஒரு சிறிய நூலைப் போன்று, சிறிய தூசி தும்பைப் போன்று, ஒரு காரியத்தின் சிறிய மயிரைப்போன்ற, மிகவும் சின்னஞ்சிறியதாக காணப்படுகிறது, ஆனால் அப்போது அங்கே உள்ளே, ஒரு சிறிய - ஒரு சிறிய சுரப்பியானது இந்த சுரப்பியிலிருந்து வெளியே வந்து, வளரத் தொடங்குகிறது. பிறகு வேறொன்று அதன்மேல் வளருகிறது, அதன்மேல் வேறொன்று வந்து (இப்படியாக) முதுகெலும்பில் துவங்குகிறது. பிறகு அது வெளியே போகிறது; கடைசியானது தொப்புள் கொடியாக இருக்கிறது. கவனியுங்கள், அதன்பிறகு அது இந்த (தொப்புள்) கொடியின் மூலமாக உணவு ஊட்டப்படத் தொடங்குகையில்... இப்பொழுது, முதலாவது அது ஏறக்குறைய திராட்சைப்பழத்தின் அளவிலும், அதன்பிறகு ஏறக்குறைய ஒரு எலுமிச்சை அளவிலும், பிறகு ஒரு ஆரஞ்சு அளவிலும் இருந்து, அதன்பிறகு வடிவத்தை எடுக்கத் தொடங்குகிறது. ஒன்பது மாதங்களில் குழந்தைப் பிறக்கிறது. அது தொடர்ந்து செல்களை பெருக்கிக்கொண்டேயிருக்கிறது. அது தொடர்ந்து வருகையில், எதுவும் அதை குறுக்கீடு செய்யவில்லை என்றால், அது ஒருக்கால் 170 அல்லது 180 பவுண்டுகளோ, இருநூறு பவுண்டுகள் உடைய ஒரு மனிதனாகவோ, ஒரு பெண்ணாகவோ, அல்லது அதைப்போன்றதாகவோ, கர்த்தரால் தீர்மானிக்கப்பட்ட எதுவாகவோ ஆவது வரை தொடர்ந்து வருகிறது. அங்கே தான் அந்தக் குழந்தை இருக்கிறது... 47. இப்பொழுது, மீண்டுமாக அது முழுவதுமாக அழிந்து போவதை எடுத்துக்கொள்வோம். அது உயிரணுவுக்குப் பின் உயிரணுவாக முழுவதுமாக அழிந்து போவதை எடுத்துக்கொள்வோம். கை போய்விடுகிறது, தலை போய்விடுகிறது, சரீரம் போய்விடுகிறது, அப்படியே தொடர்ந்து ஒரு சிறு செல்லாக இருப்பது வரையில் வருகிறது. அங்கிருந்து தான் அது துவங்கினது. அதன்பிறகு அந்தச் சிறிய செல்லானது ஒரு ஜீவ அணு வரைக்குமாக கீழே விழுந்து விடுகிறது. நல்லது, அந்த ஒரு ஜீவ அணு என்பது என்ன? அந்த ஜீவ அணுவானது சின்னஞ்சிறிய, காணப்படுகிற செல்லாக இருக்கிறது, அது எல்லா செல்களிலும் மிகச்சிறியதாக இருக்கிறது. இப்பொழுது, அதற்கும் அப்பால் என்ன இருக்கிறது? அவனுடைய ஆவி, அந்த ஜீவன். அந்த ஜீவன் அதற்குள்ளே தானே இருக்கிறது, அது இயற்கைக்கு மேம்பட்டதாக இருக்கிறது, அது இயற்கைக்கு மேம்பட்டதிலிருந்தும், cosmotics-களிலிருந்தும், மற்றும் அதைப் போன்றவைகளிலிருந்தும், அந்த சரீரத்தை வளரச்செய்து, உருவாக்குவதிலிருந்தும் வெளியே வருகையில், அது தானாகவே உருவாக்கப்பட்டு வெளியே வந்து விடுகிறது, ஆனால் அந்த முதலாவது காரியம் ஒரு ஜீவன் தான். இப்பொழுது, நாம் ஒரு புற்றுநோயைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். அப்படியானால் ஒரு புற்றுநோய் என்பது என்ன? ஒரு புற்றுநோய் என்பது வேறொரு ஜீவனாக இருக்கிறது. அது உண்மை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? கட்டியோ, கண்புரை நோயோ, அந்தக் காரியங்களில் எதுவுமோ, ஜீவ அணுக்களோ வேறொரு ஜீவனாகத்தான் இருக்கின்றன. இப்பொழுது, இதோ உங்களில் ஏதோவொரு இடத்தில் வேறொரு சிறிய ஜீவன் வருகிறது. வழக்கமாய் புற்றுநோயானது ஒரு கன்றிப்போன காயத்திலிருந்து வருகிறது. எல்லா இயற்கையான காரியங்களுமே ஆவிக்குரியதற்கு மாதிரியாக உள்ளன. இயற்கையான பிறப்பில் இருப்பது போன்று... 48. இப்பொழுது, அங்கே... இதைப் புரிந்து கொள்ள போதிய வயதுள்ளவர்களாக இருப்பவர்களைத் தவிர வேறு ஜனங்களை நான் காணவில்லை, நான்-நான் ஆண்களும் பெண்களும் கலந்த கூட்டத்தை உடையவனாயிருக்கிறேன். இது ஒரு மருத்துவர் கூறுவதாக இருந்திருந்தால், நான் உங்கள் சகோதரனாக இருக்கிறேன், எனவே கவனியுங்கள். ஜீவனில், ஒரு குழந்தை இயற்கையான பிறப்பில் பிறக்கும்போது, ஒரு குழந்தையில் உள்ள முதலாவது காரியமானது, முதலாவது காரியம் தண்ணீராகவும் (அது சரிதானா), இரத்தமாகவும், அதன்பிறகு ஜீவனாகவும் இருக்கிறது. அது தசைகளை இழுக்கிறது, ஆனால் அது பிறப்பது வரையில் அது ஜீவனைக் கொண்டிராது. இப்பொழுது கவனியுங்கள், ஆனால் மூச்சுவிட்டு சுவாசிக்கும் ஜீவனைத் தான் கூற நினைக்கிறேன், நான்... என்று உங்களுக்குத் தெரியும். இப்பொழுது கவனியுங்கள், அவ்வண்ணமாகத்தான் ஆவிக்குரிய பிறப்பிலும் இருக்கிறது. இயேசுவின் சரீரத்திலிருந்து வெளி வந்த முதலாவது காரியம், அந்தக் காரியமானது, அவருடைய சரீரத்திலிருந்து வந்த மூலப்பொருட்கள் தான், ஆவிக்குரிய சரீரத்தை ஒன்றுபட்டு உருவாக்குகிறது. இயேசு மரித்தபோது, அவரிடத்திலிருந்து என்ன வந்தது - அவருடைய சரீரத்திலிருந்து எது வந்தது? தண்ணீர், இரத்தம் மற்றும் ஆவி. அது சரிதானா? இப்பொழுது, இயற்கைக்கு மேம்பட்ட பிறப்பை உருவாக்குவதும் அந்தக் காரியங்கள் தான்... ஒரு மனிதன் மறுபடியும் பிறக்கும்போது, அவன் - அவன் மூன்று மூலப்பொருட்கள் வழியாகப் போயாக வேண்டியிருக்கிறது: தண்ணீர், இரத்தம், ஆவி: விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல், கர்த்தரிடம் விசுவாசமாயிருத்தல்; பரிசுத்தமாக்கப்படுதல், அந்த ஜீவனானது முற்றிலுமாக கழுவித் தூய்மையாக்கப்படுதல்; பிறகு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம். கிருபையின் மூன்று கிரியைகள் அல்ல, ஒரே கிருபை... கவனியுங்கள், விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல், இரத்தத்தின் மூலமாக பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம். ஒரு குழந்தை பிறக்கும்போது, தண்ணீர், இரத்தம், மற்றும் ஆவி. ஒரு குழந்தை பிறக்கும்போது, பரலோகத்தில் புதிதாக குழந்தையானது பிறக்கும்போது, அவன் தண்ணீர், இரத்தம் மற்றும் ஆவியினூடாக வருகிறான். இயற்கையானது ஆவிக்குரியதற்கு மாதிரியாக உள்ளது. பூமியின் மேலுள்ள ஒவ்வொரு காரியமும். இயற்கையை கவனிப்பது, அதுதான் என்னுடைய முதலாவது வேதாகமமாக இருந்தது. இயற்கையானது தேவனோடு முழுவதுமாக மாதிரியாக உள்ளது, நீங்களும் அதே காரியத்தைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கண்டுகொள்கிறீர்கள். 49. இங்கே கவனியுங்கள். இப்பொழுது, நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதைக் காண்கிறோம். உங்கள் தகப்பனும் தாயும் பரிசுத்த இணைப்பின் மூலமாக விவாகம் செய்து, தாங்கள் ஒருமித்து ஜீவிப்போம் என்றும் அதைப் போன்ற மற்றவைகளையும் தேவனுக்கு வாக்குக்கொடுத்தார்கள், பரிசுத்த விவாகத்தின் மூலமாக... அதன்பிறகு மகரந்தத்தூளின் முலமாக, பிள்ளைகளைப் பெற்று, "போய் பலுகிப்பெருகி, பூமியை நிரப்புவது தான் தேவனுடைய திட்டமாக இருந்தது," அங்கிருந்து தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது, இங்கேயோ நீங்கள் வளருகிறீர்கள், இதோ புற்றுநோய் என்னப்பட்ட வேறொரு ஜீவன் உங்களுக்குள்ளே வருகிறது. இப்பொழுது, அவன் எங்கிருந்து வந்திருப்பான்? அவன் அங்கே ஆதியில் இருக்கவில்லை, ஆனால் இதோ இப்பொழுது அவன் அங்கே இருக்கிறான். இப்பொழுது, என்ன சம்பவித்தது? இப்பொழுது, இயற்கையான மண்டலங்களில், ஒரு புற்றுநோய் என்பது மரித்து அல்லது அழுகிக் கெட்டுப்போன பொருட்களைத் தின்னும் ஒன்றாகவோ, (scavenger), மரித்த காரியங்களைத் தின்னும் பருந்துவகையாகவோ இருந்திருக்கும். ஒரு புற்றுநோயானது ஒரு கன்றிப்போன காயத்திலிருந்து வருகிறது. காயப்படுத்தப்பட்ட செல்லானது, வழக்கமாக அங்கிருந்து தான் அது வருகிறது. அந்த செல்லானது காயப்படுத்தப்படுகிறது. அது முழுவதுமாக நெரிக்கப்படுகிறது (mashed up). வேறுவழியில் சொன்னால், அந்த செல்லானது பின்மாற்றமடைகிறது. அதற்கு இரத்தத்தைச் சரியாக செயல் புரியவைப்பது தோல்வியடையும் ஏதோவொன்று அங்கே உள்ளே நடக்கிறது. அங்கே அதனூடாக, மரணத்திற்கு காரணகர்த்தாவாகிய சாத்தான், தேவனோ ஜீவனின் காரணகர்த்தாவாக இருக்கிறார், மரணத்திற்கு காரணகர்த்தாவாகிய சாத்தான், அசுத்த ஆவி (devil) என்று அழைக்கப்படும் ஒரு பிசாசை (demon) அங்கே உள்ளே வைத்திருக்கிறான், அது புற்றுநோய் என்னப்படும் பிசாசாக இருக்கிறது. புற்றுநோய் என்பது அதனுடைய பெயரல்ல. மருத்துவ விஞ்ஞானம் தான் ஒரு புற்றுநோய் என்ற பெயரை அதற்குக் கொடுத்திருக்கிறது. புற்றுநோய் என்ற வார்த்தையானது நண்டு என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. அப்படியானால், வெளியே ஓடுகிற கால்களையும் மற்றும் காரியங்களையும் உடையதாக அது அர்த்தப்படுகிறது. மற்ற வியாதிகளைப் போன்றே, அவர்கள் மருத்துவ பெயர்களை (medical terms) சூட்டியிருக்கிறார்கள். அதன்பிறகு அந்தச் சிறு புற்றுநோய் அங்கே உள்ளே வருகிறது, முதலாவது அது ஒரு ஆவியாக இருக்கிறது. பிறகு அது பின்மாற்றமடைந்த ஒரு செல்லிற்குள், அல்லது காயப்படுத்தப்பட்ட ஒரு செல்லிற்குள், அல்லது சரியாக வேலைசெய்யாத ஒரு செல்லிற்குள் வருகிறது. 50. ஓ, இப்பொழுது எனக்கு நேரம் இருந்திருந்தால், ஐந்து நிமிடங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்பியிருப்பேன். சபையிலும் அதுதான் சம்பவிக்கிறது. யாரோ ஒருவர் சபையோடு கூட இயங்கத் தவறிப்போய், பலமாக இழுத்து விலக்கிக் கொண்டு சென்று (pulling off), அலட்சியப்போக்குடையவராக ஆகிவிடும்போது, அதுதான் சபையிலுள்ள ஒரு புற்றுநோயாகும். அது அந்த நபருக்குள் இருக்கும் ஒரு பிசாசாக இருக்கிறது. அது சரியே. அப்போது முழு சபையும் அதன்பேரில் வியாதிப்பட்டதாக இருக்க அது காரணமாகி விடுகிறது. செய்ய வேண்டிய மிகச்சிறந்த காரியம் என்னவென்றால் ஒரு ஆவிக்குரிய அறுவை சிகிச்சை தான். இப்பொழுது, ஆனால் இதிலே. இந்தச் சிறிய செல்லானது பின்மாற்றமடைகிறது, அப்போது அந்தப் புற்றுநோய் உள்ளே வந்து விடுகிறது. புற்றுநோய், அப்போது அது அங்கே கிடக்கிறது. முதலாவது அது ஒரு - அது ஒரு ஆவியாக இருக்கிறது. அதன்பிறகு அது அதன்மேலேயே சின்னஞ்சிறு செல்லை உண்டாக்கிக் கொள்கிறது. இந்தச் சிறு செல்லானது அதனுடைய முதலாவது... ஆகிறது. என்னால் அதற்கான பெரிய வார்த்தைகளை அழைக்க முடியவில்லை, ஆனால் அது ஜீவனின் முதலாவது வடிவமாக உள்ளது, அது வலியற்ற புற்றுநோயாக இருக்கிறது. அது சம்பவித்துக் கொண்டிருப்பது யாருக்குமே தெரியாது. மேலும் இப்பொழுது, இந்தச் சிறிய செல் பிறக்கிறது; அதற்கு உணவு அளிக்கப்பட வேண்டும். அதற்கு உணவு அளிக்கப்பட வேண்டுமானால், அது உங்கள் இரத்த ஓட்டத்திலிருந்து உணவு உட்கொள்ளுகிறது. நீங்கள் தாயின் கர்ப்பப்பையில் இருந்தபோது, இரத்த ஓட்டத்திலிருந்து போஷிக்கப்பட்டது போன்று தான் இதுவும். அவள் புசிக்கிற பொருட்கள் மற்றும் அதைப்போன்றவைகளைக் கொண்டே நீங்கள் போஷிக்கப்பட்டீர்கள். அவ்வண்ணமாகவே இந்தப் புற்றுநோயும் உங்கள் சரீரத்தின் பொருட்களை ஆகாரமாக சாப்பிடுகிறது. அது ஒரு சிறிய செல்லாக இருக்கிறது. அதன்பிறகு அது வளருகிறது; அது சாப்பிடத் தொடங்குகிறது. வேறொரு செல் வெடித்துக் கிளம்புகிறது; வேறொரு செல் வெடித்துக் கிளம்புகிறது; வேறொரு செல் வெடித்துக் கிளம்புகிறது, சற்று கழிந்து, செல்லுக்குமேல் செல், செல்லுக்கு மேல் செல்லாக, கட்டி, கண்புரை நோய், அது என்னவாக இருந்தாலும், அது பெரிதாக, பெரிதாக, பெரிதாக, பெரிதாக, வளருகிறது, அது பெரியதாக, இன்னும் கூடுதல் செல்களாக, இன்னும் அதிக செல்களாக அகலமாக பரவிச்சென்று கொண்டேயிருக்கிறது. முதலாவது காரியம் தெரியுமா, இந்த வாலிப பெண் வியாதிப்பட்டவளாக உணரத் தொடங்கும் அளவுக்கு, அது அதிக இரத்தத்தின் உயிர்ச்சாற்றை உறிஞ்சத் தொடங்குகிறது. புரிகிறதா? அது என்னவாக இருக்கிறது? அது விஷமாகவும் கூட இருக்கிறது; அது மரணமாக இருக்கிறது. அதனால் முடிந்த சரீரத்தின் ஒவ்வொரு சிறு இழைக்குள்ளும், திசுக்களுக்குள்ளும் அது ஓடி, அதனுடைய கால்களை விரிவுபடுத்தி, ஒரு மரத்தின் வேர்களைப்போன்று weeding out-ஆகி, சுற்றிலும் எல்லாவிடங்களிலும் சென்று, குடல்களினூடாகவும் சுற்றி மூடி, மேலே முதுகெலும்பினூடாகவும் போகிறது. மருத்துவர் வந்து, திறந்து பார்க்கிறார்; அங்கே செய்ய முடிந்தது எதுவும் இல்லை. அந்த மனிதர் தம்முடைய அறிவுக்கு எட்டினவரையில், தமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூறுகிறார். அங்கே தான் அது இருக்கிறது. அவர் நோயாளியை மீண்டும் தையலிடுகிறார்; அது முடிந்து விட்டது. எல்லாம் அவ்வளவு தான். அங்கே செய்யக்கூடியது எதுவும் இல்லை. உங்களால் அதை முழுவதுமாக அறுத்தகற்ற முடியாது. எப்படியும் உங்களால் அதை முழுவதுமாக கண்டுபிடிக்க முடியாது. அங்கே அது இருக்கிறது. அப்போது, மருத்துவரின் அபிப்பிராயத்தின்படி, நோயாளி நம்பிக்கையற்றவராகவும், உதவியற்றவராகவும் போய்விடுகிறார். 51. இப்பொழுது, இங்கே தெய்வீக சுகமளித்தல் இருக்கிறது. ஓ, நான் நேரத்தைக் கடந்து சென்று விட்டேன். இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். நான் அதைக் கூறியிருக்க வேண்டியதில்லை. கவனியுங்கள், இப்பொழுது, இது மிக நன்றாக மனதில் பதியட்டும். இதோ நோயாளிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மேலே வந்து கொண்டிருக்கிறார்கள், நாம் அதை பெயர்களில் (terms) அழைக்கையில், இதோ சுகமளிப்பவர் நின்று கொண்டிருக்கிறார், ஏனென்றால் இந்தப் பிற்பகலில் நாமெல்லாரும் கிறிஸ்தவர்களாகவே இங்கேயிருக்கிறோம் என்பதை கற்பனை செய்து பார்க்கிறேன். இங்கே பிரசங்கியாரைப் போன்றோ, சுகமளிப்பவரைப் போன்றோ, தீர்க்கதரிசியைப் போன்றோ, அது என்னவாக இருந்தாலும் அதைப்போன்றோ ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். இதோ அவர் நிற்கிறார். அவர் வெறுமனே ஒரு மனிதன் தான், ஆனால் இதோ பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து, இந்த நபரை அபிஷேகிக்கிறார். அதன்பிறகு அவன் தனக்கு சொந்தமானவன் அல்ல; அவனுக்கும் தேவனுக்கும் மாத்திரமே தெரியும் ஒரு இரகசியத்தை அவன்-அவன் தன்னுடைய இருதயத்தில் வைத்திருக்கிறான். அவன் தன்னை ஆவிக்குள்ளாக ஒப்புவித்திருக்கிறான். ஒரு பிரசங்கியார் பிரசங்க பீடத்திற்குப் போவதைப் போன்று, தன்னைத்தானே சமர்ப்பித்து விடுகிறான். அவன் இங்கே முழுவதுமாக ஒரு பிரசங்க தலைப்பை வைத்திருந்து, "ஓ, இதன்பேரில் தான் நான் பிரசங்கம் பண்ணப்போகிறேன்" (என்று கூறுகிறான்.) ஆனால் அவன் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், அது கிரியை செய்வதில்லை. ஆவியால் நிறையப்பட்ட ஒரு உண்மையான பிரசங்கியார் ஒவ்வொரு முறையும் ஆவியையே பின்பற்றுவார். அந்த பழைய உலர்ந்து போன பிரசங்கத்தை அவர் முயற்சித்தால், அவர் தம்முடைய சபையாரை தூங்கச் செய்துவிடுவார். ஆனால் அவர் முன்னால் சென்று, ஆவியைப் பின்பற்றுவாரானால், தேவன் அதைக்கொண்டு சரியாக வெளியே மிக ஆழத்திற்குள்ளாக அவரை வழிநடத்துவார். அது சரியென்று உங்களுக்குத் தெரியும். தேவன் ஒரு செய்தியை புறப்பட்டு வரச்செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார். நல்லது, இதோ இப்பொழுது சுகமளித்தலைக் கொண்டவராக, இந்த மனிதர் நின்று கொண்டிருக்கிறார். அவர் அபிஷேகிக்கப்பட்டவராயிருக்கிறார். இப்பொழுது, முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, இதோ ஒரு நோயாளி மேலே ஏறி நடந்து வருகிறார். உண்மையான விசுவாசம், இதோ அம்மனிதர் அபிஷேகிக்கப்பட்டவராக நின்று கொண்டிருக்கிறார். அந்த நோயாளி மேலே வரத்துவங்குகையில், அந்த அபிஷேகிக்கப்பட்ட மனிதர், இப்பொழுது அந்த மனிதர் அல்ல, அவர் வெறுமனே ஒரு மனிதர் தான், ஆனால் அவர்மேல் இருக்கும் ஆவியானவர் தான்... இயேசு, "நானல்ல, ஆனால் எனக்குள் வாசம் செய்கிற என்னுடைய பிதாவானவரே" என்று கூறினார். 52. இதோ அந்த நோயாளி மேலே நடந்து வருகிறார். இப்பொழுது, அந்த சுகமளிப்பவர் நின்று கொண்டிருக்கிறார். அவர் வருகையில், அவர் அந்த நோயாளியைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய இருதயம் நிச்சயமாக அந்த நோயாளிக்காகவே இருக்க வேண்டும். அவர் கட்டாயம் அந்த நோயாளியை நேசிக்க வேண்டும். அந்த நோயாளி சுகத்தைப் பெற்றுக்கொள்வதைக் காண எதையும் செய்ய இஷ்டமுள்ளவராக அவர் இருக்க வேண்டும். அவருடைய முழு மனித ஆத்துமாவும் தெய்வீக அன்பிலே அந்த நோயாளியை நோக்கிப் போக வேண்டும், ஏனென்றால் அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பதிலீடாகவே நின்று கொண்டிருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறார். நியாயத்தீர்ப்பின் நாளிலே, ஒவ்வொரு வார்த்தைக்காகவும் அவர் பதில் கூறியாக வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருக்கிறார். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். அந்த நோயாளி மேலே வருகிறார். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அந்த நோயாளிக்குள்ளிருக்கும் அந்த புற்றுநோய் அசையத் தொடங்குகிறது. என்ன காரியம்? அது அடையாளம் கண்டு கொள்கிறது, அந்த மனிதரை அல்ல; அந்த மனிதரின் மேலிருக்கும் அந்த ஆவியானவரை அது அடையாளம் கண்டுகொள்கிறது. அவர்கள் கட்டப்பட்டவர்களாகவும், உரக்கக் கத்திக் கொண்டிருப்பவர்களாகவும், கூச்சலிடுபவர்களாகவும் இருக்கும்போது, வரும்படி நான் அவர்களைக் கொண்டிருந்திருக்கிறேன், அவர்களுடைய சொந்த பெயரும் கூட தெரியாதவர்களாக இருந்தாலும், "வில்லியம் பிரன்ஹாமே, உனக்கு என்னோடு எந்த சம்பந்தமும் கிடையாது" என்று கூறுவார்கள். அப்போது ஜனங்கள், "ஏன், அவர்களுக்கு தங்கள் சொந்த பெயரும் கூடத் தெரியாதே" என்று கூறுவார்கள். அது அவர்களல்ல, அது அவ்விதமாக அவர்களை மிகவும் கட்டுப்படுத்தி வைத்திருந்த அந்தப் பிசாசாக இருந்தது, அது அவ்வாறு இருப்பது அவனுக்குத் தெரியும். "உனக்கு என்னோடு எந்த சம்பந்தமும் கிடையாது." இதோ இப்பொழுது அவர்கள் மேலே வருகிறார்கள், அங்கே நீங்கள் உங்கள் நோயாளியைக் காண்கிறீர்கள். அது மேலே வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் உதவியற்றவர்களாகத்தான் இருக்கிறீர்கள். நீங்கள் கூட்டத்தினரை நோக்கித் திரும்புகிறீர்கள். ஒரு குற்றம் கண்டுபிடிக்கும் ஆவி இதோ உள்ளே வருகிறது; ஒன்று இங்கிருந்து வருகிறது; ஒன்று இங்கே மேலிருந்து வருகிறது. நீங்களோ அபிஷேகிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்கள்; உங்களால் அதை உணர முடிகிறது. இதைப்போன்று - அப்படியே வியூ, வியூ, வியூ என்று போவதைப் போன்று. [சகோதரன் பிரன்ஹாம் காற்று வீசுவதைப் போன்று ஒரு சத்தத்தை எழுப்புகிறார் - ஆசிரியர்.] உங்களால் அதை உணர முடிகிறது. அதன்பிறகு, இங்கேயுள்ள இந்த ஆவியை உங்களால் உணர்ந்து அறிந்துகொள்ள முடிகிறது... நீங்கள் அபிஷேகிக்கப்படுவதைக் கவனித்து, பரிசுத்த ஆவிக்காகவும் உணருவீர்களானால், இதோ இங்கே வேறொன்று கூச்சல் போடுவதையும் நீங்கள் கேட்பீர்கள். ஜனங்கள் மத்தியில் ஒரு அவிசுவாசத்தை உண்டாக்கவும், அவனால் செய்ய முடிந்த எதையும் செய்ய முயற்சிக்கவும், இங்கேயிருக்கும் இந்த ஒன்று உதவிக்காக, அங்கேயிருக்கும் அந்த ஒன்றை நோக்கி கூக்குரலிடுகிறது. இதோ பிசாசு பிடித்த ஒரு வயதான நபர் அதோ உட்கார்ந்து கொண்டு, "இப்பொழுது, பாருங்கள், அவர் அப்படியே அவர்களுடைய மனதிலுள்ளவைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்" என்று கூறிக் கொண்டிருப்பான். அவனால் தனக்கு அடுத்திருப்பவனுக்கு அந்த அதே ஆவியை கொடுக்க முடியுமானால், அவன் அடுத்திருப்பவனுக்கு, அவன் அடுத்திருப்பவனுக்கும் கொடுக்க முடியுமானால், அவர்கள் ஒரு சங்கிலிதொடரை (chain) வலுவாக ஏற்படுத்திக்கொள்கிறார்கள். உங்களுக்குப் புரிகிறதா? இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்துச் சென்றார், அவிசுவாசிகளையோ வெளியே தள்ளிவிட்டார். 53. இயேசு ஒரு குருடனைச் சுகமாக்கும்படியாக போனபோது, அவர்கள் சுற்றிலும் நின்று குறைகூறிக் கொண்டிருந்தார்கள் (criticizing), அவர் அவனுடைய கரத்தைப் பிடித்து, அவனை பட்டணத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டு போனார். பேதுரு தொற்காளை எழுப்பச் சென்ற போது, அவர்கள் எல்லாரும் அலறி கூச்சலிட்டுக் கொண்டும், அழுதுகொண்டும், அவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டிருந்த போது, அவன் அவர்கள் ஒவ்வொருவரையும் வெளியே போகப் பண்ணினான். அது சரியே. அதிலிருந்து உங்களை நீங்களே பிரித்து விடுவித்துக்கொள்ளுங்கள் (Get to yourself). இதோ அந்த நோயாளி இருக்கிறார், ஆனால் நீங்கள் அநேகமாக இங்கே பொது காட்சியைப் போன்றே நின்று கொண்டிருக்கிறீர்கள். ஓ, என்ன சம்பவிக்கும். இங்கே நின்று கொண்டிருக்கும் இந்தப் பெண்ணின் தீர்மானம் என்னவாக இருக்கும்? நான் உன்னைக் காண்கிறேன்... அதன்பிறகு முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஆவியானவர் அபிஷேகம் பண்ணத் தொடங்குகிறார். அவள் நல்ல விசுவாசத்தோடு வருகிறாள், அவள் தன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசித்தவளாக வந்து கொண்டிருக்கிறாள். இதோ நீங்களும் இங்கே அதேவிதமாகவே நின்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது இங்கே இந்த பிசாசின் வல்லமைகள் கிரியை செய்து கொண்டிருக்கின்றன, அங்கே அதனூடாக வெளியே முழுவதுமாக கிரியை செய்து, அதனால் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால் தான் நீங்கள் கூறுகிறீர்கள் - சிலசமயங்களில் நான், "இங்கேயிருக்கும் இந்தப் பெண்மணிக்கு குறிப்பிட்ட-குறிப்பிட்ட காரியங்கள் உள்ளன. அங்கேயிருக்கும் அந்தப் பெண்மணிக்கும் அதே காரியம் இருக்கிறது. அங்கேயிருக்கும் அவருக்கும் அதே காரியம் உள்ளது. அங்கேயிருக்கும் அந்த ஒருவருக்கும்..." என்று கூறுவதைக் கேட்கிறீர்கள். அது ஒவ்வொரு முறையும் சத்தியமாகவே உள்ளது. அது சரிதானா? அது என்னவாக இருக்கிறது? அது அங்கேயுள்ள அந்த வாய்க்காலாக உள்ளது, அந்த பிசாசுகள் அலறி அச்சத்தால் கூக்குரல் இடுகின்றன. ஏன், ஒரு தரிசனத்தில், உங்களால் ஏறக்குறைய ஒரு இருண்ட கீற்றைக் (dark streak) காண முடியும். அது சரியே. அது அப்படியே, நமக்கு ஒரு இழுப்பைக் கொடுக்கிறது. உங்களால் அதை உணர முடியும். அதை எப்படி உங்களுக்குச் சொல்லுவது என்று எனக்குத் தெரியவில்லை, நீங்கள் அதை உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் அதை உணருகிறீர்கள். 54. இப்பொழுது, காரியம் என்னவென்றால், நீங்கள் அந்த நோயாளிக்கு உதவ முயற்சிக்கிறீர்கள். இப்பொழுது, இதோ நோயாளி இருக்கிறார். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நான், "ஓ, என்னே. இப்பொழுதும், ஆண்டவரே, "நீ உத்தமமாக இருந்து, ஜனங்கள் உன்னை நம்பும்படி செய்து, நீ ஜெபிக்கும்போது, அந்த ஜெபத்திற்கு முன்பாக எதுவுமே நிற்காது" என்று சொல்லியிருக்கிறீர்" என்று கூறுவேன். நான், "கர்த்தாவே, அவர்கள் என்னை நம்பமாட்டார்களே" என்று சொன்னேன். அவர், "மோசேக்குக் கொடுக்கப்பட்டது போன்று, உனக்கும் இரண்டு - இரண்டு வரங்கள் கொடுக்கப்படும், நீ இந்தக் காரியங்களைச் செய்து முடிப்பாய். இதன் மூலமாக, அவர்கள் விசுவாசிப்பார்கள்" என்று கூறினார். முதலாவது காரியம் என்னவென்றால்... பிரதான காரியமானது... எதுவுமில்லை. அதற்கும் ஜனங்களுடைய சுகமளித்தலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் வியாதிப்பட்ட ஜனங்களுக்காக ஜெபிக்கவே இந்த உலகத்தில் பிறந்தேன் என்றும், ஜனங்கள் என்னை நம்பும்படி செய்து, உத்தமமாக இருக்க என்னால் கூடுமானால், நான் ஜெபிக்கும்போது, அந்த ஜெபத்திற்கு முன்பாக எதுவும் நிற்காது என்றும் அவர் என்னிடம் சொன்னார். அதைத்தான் அவர் என்னிடம் கூறினார். அது சத்தியமாக உள்ளது. அது சரியே. அது... அல்ல. பாருங்கள், இது சுகமளித்தல் அல்ல. இது சுகமளித்தலில் விசுவாசம் கொள்ளும்படியான ஒரு விசுவாசத்தை ஒன்றாக சேர்த்து குவிக்க மாத்திரமே செய்கிறது. 55. அதோ அங்கே நோயாளி நின்று கொண்டிருக்கிறார். இப்பொழுது, நான் என்ன செய்வது என்று வியந்து கொண்டிருக்கிறேன். நானே தள்ளாடுவதாகவும், போவது போலவும் உணருகிறேன். உங்களை விட்டு ஏதோவொன்று போய்க் கொண்டிருப்பது போன்று தோன்றுகிறது. அது நடந்து கொண்டிருக்கும் ஒரு யுத்தமாக இருக்கிறது. இதோ இங்கே பரிசுத்த ஆவியானவர் நின்றுகொண்டு, அந்த தாக்குதலுக்கு எதிராக நேருக்கு நேர் சந்திக்கிறார். தேவனுடைய வார்த்தை சரியாக இருக்கிறது. பிசாசினால் அபிஷேகிக்கப்பட்ட மனிதனும் ஸ்திரீகளும் அங்கே உட்கார்ந்திருந்து, "அது தன்வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism); அது மனோசாஸ்திரம். அதெல்லாமும் இதுவாகவோ அல்லது அதுவாகவோ தான் இருக்கிறது. அது தவறாக இருக்கிறது, அது தவறாக இருக்கிறது" என்று கூறிக் கொண்டிருந்து, மீதியாக இருக்கும் மற்ற கூட்டத்தினரையும் அபிஷேகிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயோ பரிசுத்த ஆவியானவர் அவர்களை விசுவாசிக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் ஒரே பிரிவாக ஒன்றுகூடியிருப்பவர்கள். அது சரியே. அவர்கள் ஒன்றாகக் கூடியிருந்து, தங்களைத்தாங்களே சேர்த்துப் பிணைத்துக் கொள்கிறார்கள். அதன்பிறகு, அந்த ஆவியானது அந்த ஜனங்களின் மேல் வந்து அமருவதை என்னால் உணர முடியும்போது, ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது. நான் சுற்றும் முற்றும் பார்த்து, "இப்பொழுது, பரிசுத்த ஆவியானவரே, நான் அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களை அறிந்து கொள்வேன் என்றும், இதன் மூலமாக, அவர்கள் என்னை விசுவாசிப்பார்கள் என்றும் நீர் என்னிடம் சொல்லியிருக்கிறீரே" என்று சிந்திக்கிறேன். நான், "இப்பொழுதும், கர்த்தாவே, என்னுடைய இருதயத்தில், இந்தப் பெண் என்ன செய்திருக்கிறாள் என்பதையோ, அல்லது இவளுக்கு என்ன-என்ன தவறு நேர்ந்துள்ளது என்பதையோ நான் அறிந்து கொள்ளட்டும்" என்று கூறுகிறேன். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, நான் வேறொரு உலகத்திற்குள் உடைத்துக்கொண்டு போகிறேன் (break). நான் என்னுடைய சத்தத்தைக் கேட்கிறேன், இருப்பினும் நான் பேசிக் கொண்டிருப்பது எனக்குத் தெரியாது. இருப்பினும், நான் இந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டே, அவள் என்ன செய்திருக்கிறாள் என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவள் மருத்துவரின் அலுவலகத்தில் இருந்தாள் என்றும், இவள் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்தாள் என்றும், இவளுக்கு புற்றுநோய் இருப்பதாக அவர் கூறினார் என்றும் கூறிக் கொண்டிருக்கிறேன். இவள் இந்தக் குறிப்பிட்ட-குறிப்பிட்ட காரியத்தைச் செய்தபோது. அங்கே இவள்... இவள் ஒரு வீட்டை விட்டு வெளியே வருவதை நான் காண்கிறேன்; நான் அண்ணாந்து பார்த்து, அந்த வீட்டு எண்ணைக் காண்கிறேன். நான் ஒரு தெருவைக் காண்கிறேன், ஒருக்கால் நான் அந்தப் பட்டணத்தை அடையாளம் கண்டு கொள்கிறேன், அல்லது ஒரு அடையாளத்தை, அல்லது-அல்லது ஏதோவொன்றைக் காண்கிறேன். இவள் தன்னுடைய கரத்தில் ஏதோவொன்றை வைத்திருக்கிறாள். அல்லது இவள் எங்கே முழங்கால்படியிட்டு, ஜெபித்துக் கொண்டிருக்கிறாள் என்பதையோ, அல்லது அவ்விதமான ஏதோவொன்றையோ கூறுகிறேன். அதன்பிறகு முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அது என்னிடமிருந்து மங்கலாகி மறைந்து போகிறது. அது அவ்வாறு மறைந்து போகும்போது, நான், "நீ விசுவாசிக்கிறாயா? அது உண்மை தானா, சகோதரியே?" என்று கேட்கிறேன். "அது உண்மை. அதன் ஒவ்வொரு சிறு காரியமும் உண்மையாக இருக்கிறது." 56. பிறகு நான் திரும்பிப் பார்க்கிறேன், அந்த யுத்தம் இன்னும் நடந்து கொண்டிருப்பதை உணருகிறேன். அப்போது, நான் என்ன செய்யப் போகிறேன்? எனக்குத் தெரியாது. நான், "நல்லது, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்" என்று கூறி, ஜெபித்துவிட்டு, அவர்களை அப்படியே போக விடுகிறேன். பத்தில் ஒன்பது தடவைகள், அந்த ஜீவனானது இன்னும் சரியாக அங்கேயே தாக்கிக்கொண்டே தான் இருக்கும். ஆனால் இதோ அப்படியே அவளைப் போன்று வேறொருவர் வருகிறார், அதே காரியமே இருக்கிறது. அவள் அங்கே நடந்து வந்த உடனே, அது அவளுக்கு வெளிப்படுகிறது. சகோதரனே, அப்போது இங்கே கீழே ஏதோவொன்று சம்பவிக்கிறது. என்ன நடக்கிறது? அப்போது, அந்த ஆவி சரியாக இருப்பதை நான் உணர்ந்து, நான், "சாத்தானே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவளை விட்டு வெளியே வா" என்று கூறுகிறேன். உரைத்து, அந்த மரத்திலிருந்து ஜீவனை வெளியே வரச்செய்த அதே தேவன் தான், அதே பரிசுத்த ஆவி தான் பேசி, அந்த ஸ்திரீயை முழுவதுமாக தின்றுபோட்ட அந்த புற்று நோயை விட்டு ஜீவனை வெளியே வரச்செய்வார்... சரிதானா? அவள் அவசரம் அவசரமாக புறப்பட்டு, வீட்டிற்குப் போய், ஜனங்களிடம், "ஓ, தேவன் என்னைச் சுகமாக்கி விட்டார்" என்று கூறிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கணவனோ, "இப்பொழுது, இப்பொழுது, நீ முழுவதும் உணர்ச்சி வசப்பட்டு விட்டாய்" என்று கூறுகிறான். அவள் சென்று, சரியாக இல்லாமலே தன்னைத்தான் நீதிகரித்துக்கொண்டவராயிருக்கும் தன்னுடைய மேய்ப்பரிடம் கூறுகிறாள். "ஏன் அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. போய் உன்னுடைய மருத்துவரைக் கேட்டுப்பார்." மருத்துவரோ, "ஏன் அந்த வளர்ச்சி இன்னும் அங்கே தான் இருக்கிறது. அந்தப் பரிசுத்த உருளையனை நீ நம்பாதே" என்று (கூறுகிறார்). ஏன் நிச்சயமாகவே, அந்த மரம் இன்னும் அங்கே தான் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் ஜீவன் அதைவிட்டு வெளியேறிவிட்டிருந்தது. அல்லேலூயா. அவள் தொடர்ந்து சென்று, "ஆமாம், நான் அதை விசுவாசிக்கிறேன். சுகமாகவில்லை என்று என்னுடைய கணவனார் எத்தனை தடவைகள் கூறினாலும் எனக்குக் கவலையில்லை, அங்கே அதைச் சுற்றிலும் ஒரு வளர்ச்சி அவ்வளவு பெரியதாக இருந்தாலும், நான் இன்னும் - என்னுடைய இருதயத்திலுள்ள ஏதோவொன்று, நான் சுகமானேன் என்று கூறுகிறது" என்று கூறிக்கொண்டிருப்பாளாக. 57. சிலசமயம் ஒரு தரிசனம் உடைத்துக்கொண்டு புறப்பட்டு வரலாம்; பல வருங்களுக்குப் பிறகு நான் அவளைக் காண்பதாக ஒரு தரிசனம். நான், "கர்த்தர் உரைக்கிறதாவது" என்று கூறுகிறேன். சகோதரனே, அப்போது அதைக் கவனி. அது ஏற்கனவே நடந்துவிட்டது. "கர்த்தர் உரைக்கிறதாவது" நீ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமடைந்து விட்டாய். நீ சுகமடையப் போகிறாய்." அப்போது அதை உடைத்துப்போடக் கூடிய போதுமான பிசாசுகள் நரகத்தில் இல்லை. அது சரியே. அந்தப் பெண்மணி வீட்டிற்குப் போவாள். அவள் ஒரு சில நாட்கள் நன்றாக உணருவாள்; அந்த ஜீவன் வெளியே போய்விட்டது. அந்தப் புற்றுநோய் இன்னும் அங்கே தான் இருக்கிறது. அவள் சில நாட்களாக நன்றாக உணருவாள், அவள் தொடர்ந்து களிகூர்ந்தபடியே போய்க் கொண்டிருப்பாள்; முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அந்தக் கெட்டுப் போன காரியமானது (வேரிலிருந்து அது வற்றிச்சுருங்கத் தொடங்குகிறது.)... அது என்னவாக இருந்தது? அந்தப் புற்றுநோய்க்கு காரணமாக, முதலில், அங்கே உள்ளே சென்ற, அந்தச் சின்னஞ்சிறிய ஜீவ அணுவானது, அந்த ஜீவனானது வெளியே போய்விட்டது. பிசாசுகளை வெளியே துரத்துதல். அல்லேலூயா. அந்தப் பிசாசு போய்விட்டது. அது போய்விட்டிருக்கும் போது, அந்த விசுவாசி அதை விசுவாசிக்கிறான். அது என்னுடைய விசுவாசம் அல்ல; அது என் மூலமாக பரிசுத்த ஆவியானவருடைய செயல்பாடாகத்தான் இருந்தது, அது அவளுக்கு விசுவாசத்தைக் கொடுக்கிறது. அவளுடைய சொந்த விசுவாசம் தான் அவளைச் சுகப்படுத்தியது. அப்போது அவள் சுகமடைந்து விடுகிறாள். அவள் அதோ சுற்றிலும் பிரயாணம் செய்து போகிறாள். அவள் எவ்வளவு வியாதியாக இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, அவளை மாற்றக்கூடிய எதுவுமே அங்கே இல்லாமல், அவள் அப்பொழுதும் விசுவாசித்துக் கொண்டிருக்கிறாள். அவள் உறுதியாக இருக்கிறாள்; அவள் அதை தன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாள். அவள் வியாதிப்படுவது நிச்சயம். அந்தப் பழைய காரியமானது வீங்கத் தொடங்குகிறது. முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அது மேலும் மோசமாக ஆகிறது; அவள் வியாதிப்படுகிறாள். அவளுக்கு ஒரு காய்ச்சல் வருகிறது; அவள் சோர்வடைந்து விடுகிறாள். நிச்சயமாக, அது மரித்துக் கொண்டிருக்கிறது, அது சரியாக சிதைந்து கெட்டுப்போகிறது. நோயாளி சுகமடைகிறார். சிலநேரங்களில் அங்கே ஒரு அற்புதம் நடக்கிறது; அது அப்படியே முழுவதுமாக மறைந்துவிடுகிறது. ஆனால், அது என்னவாக இருக்கிறது? பிசாசுகளைத் துரத்துதல். 58. இயேசு, "மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்த மரத்தை மட்டுமல்ல, ஆனால் நீங்கள் அந்த மலையைப் பார்த்து, "பெயர்ந்து போ" என்று சொல்லி, உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல், நீங்கள் சொன்னது, சம்பவிக்கும் என்று விசுவாசிப்பீர்களானால்..." என்று கூறியுள்ளார். ஓ, மகிமை. ஓ, என்னே. நாம் அப்படியே இவ்விதமாக ஒன்றாகக் கூடிவரும்போது, இந்தப் பிற்பகல் கூட்டங்களை நான் விரும்புகிறேன். ஆம், ஐயா. ஆம், ஐயா. ஓ, "என் நாமத்தினாலே, அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்." அல்லேலூயா. அதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். அதைத்தான் நான் விசுவாசிக்கிறேன். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது. "என் நாமத்தினாலே, அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள், அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் தங்கள் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் குணமடைவார்கள்." அங்கே தான் ஒரு பிசாசு அம்பலப்படுத்தப்பட்டான். உங்கள் புற்றுநோயானது புற்றுநோய் என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு செல்லப் பெயராக (pet name) உள்ளது; அவன் ஒரு பிசாசாக இருக்கிறான். உங்களை கஷ்டப்படுத்திக் கொண்டு வருகிற அந்தச் சிறு பழைய காய்ச்சல். அதுவும் ஒரு பிசாசாக இருக்கிறது. ஆமாம், உண்மையிலேயே அது ஒரு பிசாசு தான். 59. வழக்கமாக, நீண்ட காலத்திற்கு முன்பு, மதுவிலக்கு இருந்தபோது, "ஜான் பார்லிகார்ன்" என்று அழைக்கப்பட்ட அந்தப் பழங்கால விஸ்கி கூஜா அவர்களிடம் இருந்தது, அதனோடு ஒரு மகத்தான, பெரிய பழங்கால வைக்கோல் தொப்பி அதன்மேல் இருக்கும், மேலும் ஒரு பெரிய வேடிக்கையாக தோற்றமளிக்கும் கண்களும் இருக்கும். அவன் ஒரு பயங்கரமாக தோற்றமளிக்கும் காரியமாக இருந்தான். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் பழங்கால ஜான் பார்லிகார்னை கீழே வைத்திருந்தார்கள், அவர்கள் அவனை சிறிய தகர முட்டுத் தாங்கியிலும், சிறிய தகரக் குவளையிலும் வைத்திருந்தார்கள். ஜனங்கள் அவைகள் எல்லாவற்றையும் தங்கள் குளிர்சாதனப்பெட்டியில், முழுவதுமாக வழவழப்பாக வைத்திருப்பார்கள், மேலும் அது சமுதாயத்தில் அந்தவிதமாக இருந்தது. ஆனால், சகோதரனே, அதற்குக் கீழே இன்னுமாக அந்த அதே பழைய, வெறுக்கத்தக்க, எப்பொழுதும் முதலிடத்தில் இருந்த அழுகின மதுபானம் தான் இருக்கிறது. அவன் இன்னும் அதேவிதமாகத்தான் இருக்கிறான். அவன் முட்டுத் தாங்கிகளில் இருந்தாலும், அவன் எங்கேயிருந்தாலும், அது இன்னும் அதே பழைய பிசாசு தான். நீங்கள் அவனை இந்த மருத்துவ துறையில், அழைக்கலாம், நீங்கள் அதை புற்றுநோய் என்று அழைக்கலாம், நீங்கள் அதை கட்டி என்றோ, கண்புரை நோய் என்றோ, அல்லது எந்த மென்மையான கட்டிபோன்ற வளர்ச்சி (fungus) என்றோ, அல்லது உங்களுக்கு விருப்பமான எதுவாகவும் அழைக்கலாம். ஆனால் அது இன்னுமாக, "இந்த மனிதனை விட்டு வெளியே வா" என்று இயேசு சொன்ன அதே பழைய பிசாசு தான். அல்லேலூயா. "உன் அக்கிரமங்கள் எல்லாவற்றையும் மன்னித்து, உன் நோய்கள் எல்லாவற்றையும் குணமாக்குகிற கர்த்தர் நானே." நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 60. எங்கள் பரலோகப் பிதாவே, இந்தப் பிற்பகலில் இக்கூடுகைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். வார்த்தையானது முழுவதுமாக துண்டு துண்டுகளாக வெட்டுகையில், கர்த்தாவே, ஆனால் பரிசுத்த ஆவியானவர் தாமே ஏதோவொரு விதத்தில் அதை நேராக பாகங்களாகப் பிரித்து, அதை ஒவ்வொரு இருதயத்திற்கும் தருவாராக. இன்றிரவு இந்த ஜனங்கள் இக்கூட்டத்திற்கு வரும்போது, இனிமேல் எதுவுமே அவர்களைத் தொல்லைப்படுத்தப் போவதில்லை என்ற அப்படிப்பட்ட ஒரு மனமார்ந்த தீர்மானத்தோடு கூட அவர்கள் தாமே வருவார்களாக. நரகத்திலுள்ள பிசாசுகள் எவ்விதத்திலும் அவர்களை அசைக்கக் கூடாத அளவுக்கு, விசுவாசம் தாமே அவர்களுடைய இருதயத்திற்குள்ளாக ஊக்குவிக்கப்படுவதாக. 2